நடிகர் விஜயின் தலைவா படம் 2013-ல் வெளியானது ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்கினார் வெளியாவதற்கு முன்னரே சர்ச்சைகளை கிளப்பிய படங்களில் தலைவாவும் ஒன்று படம் ரிலீஸாக இருந்த தியேட்டர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இந்த வெடிகுண்டு மிரட்டல் படக்குழுவிற்கும் விடுக்கப்பட்டது தலைவா படத்தில் இடம் பெற்றிருந்த ‘டைம் டு லீட்’ என்ற டேக் லைன் தான் இதற்கு காரணமாக இருக்கும் என சந்தேகம் நிலவி வந்தது இதனால் படத்தின் ரிலீஸ் டேட் தள்ளி வைக்கப்பட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வந்தது பல இன்னல்களை கடந்து ரிலீஸ் ஆன தலைவா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது இயக்குநர் ஏ எல் விஜய், தலைவா 2 எடுக்க கதையெல்லாம் ரெடியாக இருப்பதாக கூறினார் நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்தால் தலைவா 2 படத்தை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்