ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ப்யார் ப்ரேமா காதல் ஸ்ரீ என்ற கதாப்பத்திரத்தில் நடுத்தர இளைஞராக நடித்திருந்தார் ஹரீஷ் கல்யாண் இவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்திருந்தார் புதுமுக இயக்குநர் எலன் என்பவர் படத்தை இயக்கியிருந்தார் இளம் தலைமுறையினரின் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பின் ரியாலிட்டியை கூறிய படம் இது இதில், ரைசா வில்சன் மாடர்ன் காலத்து ரதியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது குறிப்பாக ஹை ஆன் லவ் சாங் இன்றும் பலரின் காலர் ட்யூனாக இருந்தது என்னதான் நல்ல படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களால் இப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதில் இடம் பெற்றிருந்த முத்தகாட்சி, சர்ச்சையை கிளப்பியதால், அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது