எந்நாளும் எந்நேரத்துக்கும் ஒருவர் ‘நோ’ சொல்லாமல் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. ஆனால் தோசை சாப்பிடத் தெரிந்த அளவுக்கு எல்லோருக்கும் சரிவர தோசை ஊற்ற வராது... எளிதாக முறுவலாக தோசை ஊற்ற சில டிப்ஸ்கள் இதோ... முக்கியமாக மாவினை நைஸாக அரைக்காமல் நரநரவென்னும் பதத்தில் அரைக்க வேண்டும். தோசை ஊற்றத் தொடங்குவதற்கு முன்பு தோசைக்கல் சூடாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். போதுமான அளவு சூடாக இருக்கிறதா என்பதை அறிய ஒரு எளிய சோதனை, அதன் மீது சிறிது தண்ணீர் தெளிப்பது. தோசை தயாரிப்பதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்பே ஃபிரிட்ஜில் இருந்து மாவை எடுத்து வெளியே வைக்கவும். அது போதுமான அளவு சூடாக இருக்கும்போது, சில துளிகள் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கொண்டு கல்லைத் தேய்க்கவும். தோசைக் கடாயின் மையத்தில், ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும்.பிறகு அதனை கல்லில் நன்கு வட்டமாகத் தேய்க்கவும். வட்டமான தோசையைச் சுற்றி சில துளிகள் எண்ணெயை ஊற்றவும், தோசையின் அடிப்பகுதி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். இதனை தேங்காய் சட்னி, சட்னி பொடி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.