Rahul gandhi : உடையும் INDIA கூட்டணி? பதற்றத்தில் காங்கிரஸ்! ராகுல் அதிரடி முடிவு

Continues below advertisement

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இந்தியா கூட்டணி உடையும் சூழல் நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து அவசர முடிவு எடுக்க ராகுல் காந்தி காஷ்மீருக்கு புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்திற்கு 10 ஆண்டு காலத்திற்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், இரண்டாவதாக செப்டம்பர் 25 ஆம் தேதியும் மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகளானது அக்டோபர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தருணத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் முதன்மையானவையாக உள்ளன. இந்தியா கூட்டணியில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை உள்ளன

இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணி உடையும் சூழல் நிலவுவதாக தகவல் வெளிவருகின்றன. மேலும் ,இம்முறை ஜம்மு காஷ்மீரில் தங்கள் பிரதநிதித்துவம் இருக்க வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், எந்த கட்சி தம்முடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், தேர்தல் குறித்து முடிவு எடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக செல்ல உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் முக்கிய 2 கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவும் என பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் பங்கு முக்கிய பங்கு வகிக்கும் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பாஜக தனித்து போட்டியிட உள்ள சூழ்நிலையில் , அதன் ஆதிக்கம் சற்று குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் 10 ஆண்டுகள் கழித்து தேர்தல் நடைபெறுவதால் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதாலும் , அதன் தாக்கம் பாஜகவின் இருக்கும் என்பதால் , முடிவுகளை கணிப்பது கடினம் என்றே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram