Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்! டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

சேலத்தில் நடிகர் ஜீவா சென்று கொண்டிருந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சுற்றி இருந்தவர்கள் ஜீவாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கடுப்பாகி திட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா தனது குடும்பத்தினரோடு சேலம் சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மைகரம் கிராமத்தின் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நபர் ஒருவர் வந்ததாகவும் அவர் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரை திருப்பிபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி அவர் ஓட்டி வந்த சொகுசு காரானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் நடிகர் ஜீவா ஓட்டி வந்த கார் சேதமான நிலையில் அங்கு அதிக கூட்டம் கூடியதால் அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து  வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் காரை மீட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola