Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நீக்கப்படலாம் என்று தகவல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஆக்ஷன் விரைவில் நடக்க இருக்கிறது. மேலும் ஒவ்வொறு அணியிலும் எத்தனை வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என்ற அறிவிப்பும் பிசிசிஐ தரப்பில் இருந்து சீக்கிரம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பரில் மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ரோகித் மற்றும் மும்பை அணி நிர்வாகம் இடையேயான விரிசல் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பை அணியின் இந்த முடிவை ரோகித் சர்மா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஹர்திக்கிற்கு கேப்டன்சியை கொடுத்ததிலும் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்துள்ளது,
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை அணியில் தக்க வைக்காது என்றும் அவரை ஏலத்துக்கு முன்பாகவே அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் அவர் இருப்பாரா அல்லது செல்வாரா? இது ஒரு பெரிய கேள்வி. என்னை பொறுத்தவரையில், அவர் மும்பை அணியில் நீடிக்கமாட்டார் எனபது எனது உள்ளுணர்வாக உள்ளது. அணியில் யாரைத் தக்கவைத்தாலும், அவர் மூன்று ஆண்டுகள் அணியில் இருப்பார். அதற்கு நீங்கள் தோனியாக இருக்க வேண்டும், தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் கதை வித்தியாசமானது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி அப்படி இல்லை
ஆனால் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி அப்படி இல்லை. எனவே ரோகித் தானாகவே வெளியேறலாம் அல்லதுஅண் நிர்வாகம் அவரை விடுவிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனை டிரேட் மூலம் வாங்குவதில், லக்னோ அணி நிர்வாகம் ஆர்வமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.எஸ்.ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ரோகித்தை டிரேடிங் மூலம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது, ஒரு வேளை ரோகித் அணியில் இருந்து ரீலிஸ் செய்யப்பட்டு ஏலத்துக்கு வந்தாலும் அவரை ஏலத்தில் எடுக்க 50 கோடி ரூபாய் வைத்திருந்ததாக வெளியான வதந்திகளை சஞ்சீவ் கோயங்கா மறுத்தார். இதனிடையே, கே.எல். ராகுலும் தான் கேப்டன் பதவியை வகிக்க விரும்பவில்லை எனவும், வீரராக லக்னோ அணியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏற்பட்டுள்ள லக்னோ அணியின் கேப்டன் பதிவிக்கான வெற்றிடத்தை, ரோகித் சர்மா நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.