Siddaramaiah MUDA Scam | சித்தராமையா ராஜினாமா? டென்ஷனில் ராகுல்! காங்கிரஸின் ப்ளான் என்ன?

Continues below advertisement

கர்நாடக காங்கிரஸில் ஊழல் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவருக்கு கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில் இந்த விவகாரத்தை மையப்படுத்தி பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறது. சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். 

சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் ஆகஸ்ட் 22ம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் விவகாரம் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அதிருப்தியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். அதனால் முறைகேடு விவகாரத்தில் ஆளும் அரசுக்கு சில சிக்கல்கள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது.

அதனால் நிலைமையை சரிகட்ட, இந்த கூட்டத்த்இற்கு பிறகு சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram