BJP vs Congress | ராகுல் அலை வீசுது..!மோடி - அமித்ஷா.. ஒத்து!ஹரியானாவில் சறுக்கும் பாஜக!

Continues below advertisement

பாஜக 10 ஆண்டுகளாக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில், தேர்தல் FEVER உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்.. ஹரியானாவில் ராகுல் அலை வீசி வருவதால், பாஜக இங்கே சறுக்கப்போகிறது என்ற ரிப்போர்ட் அமித்ஷாவிற்கு சென்றுள்ளது.. அது நடந்தால் ராஜ்ய சபாவில் மேலும் காங்கிரஸின் பலம் பெருகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது பாஜக..

ஹரியானாவில் வருகிற அக்டோபர் 1ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளாக பாஜகவும் காங்கிரஸும் மோதுகின்றன.

2014ல் பெரும்பான்மையுடனும், 2019ல் கூட்டணி கட்சியின் தயவோடும் ஆட்சியை பிடித்த பாஜக இந்த தேர்தலில் மண்ணை கவ்வும் சூழல் உறுவாகியுள்ளது. அதற்கு முக்கியமாக காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவை கலங்கடித்த விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் ஆகியவற்றில் முதல் வரிசையில் நின்று சண்டை செய்ததில் ஹரியானாவை சேர்ந்தவர்கள் பலர். குறிப்பாக ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர்கள் பஞ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் வீதியில் இறங்கி போராடியது ஏற்கனவே அங்கே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்காததற்கு காரணம் பாஜக தான் என்ற பிரச்சாரத்தை தீவிரமாக அங்கே முன்னெடுத்து வருகிறது காங்கிரஸ்.

பாஜக தலைவர்கள் சிலரும், வினேஷ் போகத்துக்கு எதிராக பேசியதை வைத்து உணர்வு ரீதியாக ஹரியானா மக்களை பாஜகவுக்கு எதிராக திரட்டிவருகிறது காங்கிரஸ்.

அதே நேரம் இன்னொரு முக்கியமான விவகாரம் பாஜகவின் அக்னிபாத் திட்டம். வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடும் நிலையில் இந்திய ராணுவத்தில் இணைய எப்போதுமே அதிகமாக ஆர்வம் காட்டும் ஹரியானா இளைஞர்களுக்கு இது முட்டுகட்டை போட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கோபம் அனைத்தும் பாஜக பக்கம் திரும்ப, சமீப கால செயல்பாடுகளால் இளைஞர்கள் மத்தியில் ராகுலின் மவுஸ் கூடியுள்ளது. ராகுலின் அலை அங்கே வீசுவதும் காங்கிரஸுக்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

அதே நேரம் 2014ல் ஹரியானாவின் 10 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜகவால், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் 5 மக்களவை தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால் காங்கிரஸோ 5 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியதோடு, தங்களுடைய வாக்குவங்கியை 18 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அதே போல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த ஜன்னாயக் ஜனதா கட்சியும், மக்களவை தேர்தலின் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கூட்டணியை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டது. 

மேலும் ஆம் ஆத்மி கட்சியும் அங்கே போட்டியில் இருக்கிறது, அவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கவே வாய்ப்பு அதிகம் என்பதால், பாஜக செய்வதறியாது விழிப்பிதிங்கி நிற்கிறது.

மேலும் பொருளாதரத்தில் பின்னடைவு, தண்ணீர் பிரச்சனை, விவசாய பாதிப்புகள், போராடிய விவசாயிகளை முடக்கியது என 10 ஆண்டுகளாக ஆளும் பாஜகவின் மீதான எதிர்பலை அதிகமாக நிலவுகிறது. இதனை உணர்ந்த பாஜக, ஒன்பது ஆண்டுகளாக ஹரியானாவின் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரின் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, நயாப் சைனியை முதல்வராக்கியது. கட்டார் ஆட்சி மீதான அதிருப்தியைச் சரிக்கட்ட சில டேமேஜ் கண்ட்ரோல் முறைகளை பாஜக கையாண்டாலும், அது பெரிதாக பலணளிக்கவில்லை என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் உட்பட 20க்கு அதிகமான மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, இம்முறை நிச்சயம் பல மாநிலங்களை இழக்கும், இது ராஜ்ய சபாவில் எதிரொலிக்கும் என்பதால் திக்கு முக்காடி போயிருக்கிறதாம் பாஜக தலைமை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram