Prajwal Revanna : ”என்னை மன்னிச்சிருங்க அப்பா! மன உளைச்சல் ஆகிட்டேன்” வீடியோ வெளியிட்ட பிரஜ்வல்

Continues below advertisement

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மணிக்கு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்தியா வந்து சிறப்பு புலனாய்வு துறை முன் விசாரணைக்கு ஆஜராகப்போவதாக வீடியோ மூலம் பிரஜ்வல் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனது தாய் தந்தையிடம் ப்ரஜ்வல் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஹசன் எம்.பி.ப்ரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடி தலைமறைவானதாக செய்திகள் வெளியானது. பிரஜ்வல் இருப்பிடம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் தற்போது பிரஜ்வல் ரேவண்ணா தனது பெற்றோர்களுக்கு மன்னிப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  வீடியோவில் பேசிய அவர்., வெளிநாட்டில் இருந்த போது யூடியூபில் என் மீதான குற்றச்சாட்டுகளை பார்த்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் என் அப்பா, அம்மா, தாத்தா ஆகியோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

என்மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து நான் ஜெர்மனிக்கு புறப்பட்டபோது எனக்கு தெரியாது. பின்னர் யூடியூப் பார்த்த தான், இதுகுறித்து அறிந்தேன். இதைத்தொடர்ந்து நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதானால் என்னை நானே தனிமை படுத்திக்கொண்டேன்.தொடர்ந்து பேசிய அவர், மே 31 ஆம் தேதி இந்தியா திரும்ப போவதாகவும் special investigation team முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அது போல் நான் வெளிநாட்டில் எங்கு இருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதால் குமாரண்ணா, ஜேடிஎஸ் கட்சியினர், நிர்வாகிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலும், தன் மீதான இந்த குற்றம் காங்கிரஸ் கட்சியின் சதி செயல், சட்டம் மீது நீதிமன்றம் மீது எனக்கும் நம்பிக்கை உள்ளது. சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொண்டு நான் ஒரு நிரூபராதி என்பதை நிரூபிப்பேன் என பேசியுள்ளார் ப்ரஜ்வல். 
இந்த வழக்கில் அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram