Annamalai on Prakashraj : ”மோடியை திட்டுவதே வேலை! அனுபவம் அவ்ளோதான்” பிரகாஷ்ராஜை விளாசும் அ.மலை

Continues below advertisement

 

”மோடியை திட்டுவதே வேலை! அனுபவம் அவ்ளோதான்” பிரகாஷ்ராஜை விளாசும் அ.மலை

தேர்தலுக்குப் பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கல நிலவரங்கள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் 6 கட்டங்களாக 486 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது மீதம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களின் எழுச்சியை பார்க்கும் பொழுது பாஜக  இந்த முறை மிகப்பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறும். 

தற்போதுவரை இந்தியா முழுவதும் 335 இடத்தை பாஜக தாண்டியுள்ளதாக தற்பொழுது நாங்கள் கணித்துள்ளோம். நிறைய இடங்களில் கடுமையான போட்டிகள் நடந்துள்ளது. பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய தலைவர்கள் போட்டியிட்டு உள்ளன. பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் சேர்ந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

எதிர்ப்பதை மட்டுமே முழு நேர செயலாக வைத்து ஒரு நடிகர்(பிரகாஷ்ராஜ்) செயல்பட்டு வருகிறார். பெங்களூருவில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தது தான் பிரகாஷ்ராஜ் அவர்களின் அரசியல் அனுபவம். மோடி எதிர்ப்பு என்பதன் ஒரே காரணமாக பிரகாஷ்ராஜ் பாஜக'க்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார்.
ஆண்டவன் எனக்கு என்ன வேலையை கொடுத்துள்ளானோ அதனை தான் செய்துள்ளதாக பிரதமர் மோடி ஹிந்தியில் தெரிவித்துள்ளார்.ஆனால் அதனை திரித்து மாத்தி எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram