”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

Continues below advertisement

என் தம்பியவா தோக்கடிக்கிற என்று அடிபட்ட புலியாக உறுமிக் கொண்டிருந்த D.K. சிவக்குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன்  நிகில் குமாரசாமியை நடந்து முடிந்த கர்நாடக இடைத்தேர்தலில் தோல்வி அடையச் செய்து பலிக்கு பலி தீர்த்துள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

ஒட்டுமொத்த கர்நாடகாவும் ஒரு இடைத்தேர்தல் முடிவை உன்னிப்பாக கவனித்து வந்தது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது பாஜக, ஐக்கிய ஜனதா தள் vs காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான போட்டி என்றில்லாமல், நேரடியாக குமாரசாமி vs டிகே சிவக்குமாருக்கு இடையேயான யுத்தமாகவே பார்க்கப்பட்டது. அந்த யுத்ததில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி படுதோல்வி அடைந்துள்ளார். அவரது தோல்விக்கு பின்னே நின்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தான். 

டி.கே.சிவக்குமாரும் , குமாரசாமி குடும்பமும் கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இந்த சமூகத்தினரின் வாக்கு வங்கி யாருக்கு என்பது தான் இவர்கள் இடையேயான அரசியல். இருவருக்கும் பலமான தொகுதிகள் இருப்பதால், ஒக்கலிகா சமூகத்தில் இருந்து சமமான வாக்குகள் இவர்கள் இருவர் மத்தியிலும் பிரிந்து வருகிறது. ஆனால் ஒக்கலிகா வாக்குகளை முற்றிலும்  காங்கிரஸ் பக்கம் கொண்டு வருவதே டிகே சிவகுமாரின் லட்சியம். அதற்கு அவருக்கு பக்க பலமாக இருப்பவர் தான் தம்பி டிகே சுரேஷ். 

கர்நாடகா சட்டசபை தேர்தல், மக்களவை தேர்தல்களில் இதனை சாதித்து காட்டி ஜேடிஎஸ்  கட்சிக்கு கிட்டதட்ட முடிவுரை எழுதிவிட்டார் டிகே சிவகுமார். ஆனால், பெங்களூரு கிராமப்புற தொகுதியில் மக்களவை தேர்தலில் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத்திடம் டிகே சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோல்வியைத் தழுவினார். இதனால் அடிபட்ட புலியாக உறுமிக் கொண்டிருந்த டிகே சிவகுமார், பலி தீர்க்க காத்திருந்தார். இந்நிலையில் தான் அதற்கான அருமையான வாய்ப்பு சென்னபட்டணா தொகுதியின் இடைத்தேர்தல் மூலமாக கிடைத்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட யோகேஷ்வர் இமாலய வெற்றி பெற்றுள்ளார். நிகில் குமாரசாமி 87, 229 வாக்குகள் பெற்ற நிலையில், 1,12,642 வாக்குகள் பெற்ற யோகேஷ்வர் 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இந்நிலையில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை சொந்த தொகுதியில்.. தேவகவுடா குடும்பத்தின் இரும்புக் கோட்டையில் வீழ்த்தியுள்ளார் டிகே சிவக்குமார். இதன் மூலம் தனது தம்பியை மக்களவை தேர்தலில் தோற்கடித்து தமக்கு தலைகுனிவை ஏற்படுத்திய குமாரசாமி குடும்பத்துக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிலடி  கொடுத்துள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram