Health Secretary J. Radhakrishnan on black fungus: பரவுகிறதா கருப்பு பூஞ்சை நோய்?
ABP NADU
Updated at:
21 May 2021 08:17 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கருப்பு பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதி அனைவரது மத்தியிலும் வந்திருக்கிறது. இதுகுறித்து தேவையற்ற அச்சம் இருக்க வேண்டியதில்லை என்றார். மேலும், கோவிட் தொற்றால் வரக்கூடிய புதிய வைரஸ் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறன்றன. பதற்றம் வேண்டாம். இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளாக இருக்கக்கூடியது என்றும் கோவிட் தொற்றுக்கு முன்பிருந்தே இந்த பூஞ்சை தொற்று உள்ளது என்றும் கூறினார்.