Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

Continues below advertisement

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து வளைவில் திரும்பிய போது பேருந்தில்  இருந்த பெண் நிலை தடுமாறி பேருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாரதா. இவர் தனது மகள் திருமணத்திற்காக சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்று துணி எடுத்துவிட்டு மீண்டும் மாலை சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில்  திரும்பியுள்ளார். அப்போது ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பிய போது பேருந்தில் இருந்த சாரதா,  படிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டார். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதா படுகாயம் அடைந்த நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனியார் பேருந்தில் இருந்து பெண்மணி ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram