Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதற்கு சில கொலை வழக்குகள் காரணமா என கூறி பற்றவைத்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
2014ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து பிரதமர் மோடி ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது மட்டும் எந்த வழக்கும் போடாமல் இருப்பது ஏன் என எக்ஸ் தளத்தில் ஜெஜதிஷ் ஷெட்டி என்பவர் சுப்ரமணியன் சுவாமியை டேக் செய்து கேட்டிருந்தார். அதற்கு பதில் கொடுத்த சுப்ரமணியன் சுவாமி, மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்று விமர்சித்துள்ளார். மேலும், ’ராகுல்காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை தொடர்பாக நான் கொடுத்த ஆதாரங்களை வைத்து ராகுல்காந்தியின் குடியுரிமையை மோடியும், அமித்ஷாவும் ரத்து செய்திருக்கலாம். ஆனால் அமித்ஷா எதுவும் செய்யவில்லை. ஏன்? ஹரேன் பாண்டியா மற்றும் நீதிபதி லோயா கொலை காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித்ஷாவுக்கு தொடர்புடையதாக பேசப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்து பரபரப்பானது. அதேபோல் 2003ம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் மோடி, அமைச்சருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தை குறிப்பிட்டு சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி சோனியா காந்தியுடன் ஒப்பந்தம் வைத்திருப்பதாகவும்,மோடி தன்னால் முடிந்தவரை இத்தாலிய குடும்பத்திற்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்றும், ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை அதற்கு சான்று என்றும் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.