Swiggy Delivery Guy arrest : எல்லை மீறிய SWIGGY ஊழியர்.. தட்டி தூக்கிய போலீஸ்

Continues below advertisement

ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் போது , Swiggy ஊழியர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் 24 வயது பெண், நேற்று முன் தினம் மதியம் ஆன்லைன் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்பேரில் உணவு பார்சல் எடுத்துக் கொண்டு வந்த நபர் மேற்படி பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில்  48 வயதான ரவிக்குமார், சென்னை என்பவரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட ரவிக்குமார் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram