கூகுள் நிறுவனம் 2023-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவைகள் (Google Year in Search 2023) குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் தேடப்பட்ட மனிதர்களின் பட்டியலில் நடிகை கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுப்மன் கில், முகம்மது ஷமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு எதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு ‘கூகுள்’. எது தொடர்பாக என்றாலும் பதில் அறிந்துகொள்ள உடனே கூகுள்கிட்ட கேட்டுவிடுவோம். அப்படி 2023-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் தேடப்பட்ட மனிதர்கள் (Google Most Search Person 20232) டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ளவர்கள், ஏன் தேடப்பட்டனர் உள்ளிட்ட தகவல்களை குறித்து காணலாம்.


டாப் 10 நபர்கள்


 



சித் -கியாரா


கியாரா அத்வானி (Kiara Advani)


காதல் பறவைகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்தவர்கள் கியாரா அத்வானி - சித்தார்த். இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டது சினிமா உலகம் கொண்டாடியது. திருமணம் முடிந்து முன்னதாக சித்தார்த் - கியாராவின் ரிசப்ஷன் வீடியோக்கள், விருது விழாவில் பங்கேற்ற வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளின. இவர்களின் திருமணம் தொடர்பாக கூகுளில் தேடப்பட்டுள்ளது. பாலிவுட் திருமணம் பிரம்மாண்டமாகவும் கோலாகல கொண்டாட்டமாக நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. அப்படியிருக்க கியாரா அத்வானி திருமணம்,வயது, சித்தார்த் வயது, கியாரா அணிந்திருந்த புடவை மற்றும் தாலி உள்ளிட்டவைகள் குறித்து தேடப்பட்டுள்ளதாக கூகுள் சர்ச் ட்ரெண்ட்சில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சுப்மன் கில் (Shubman Gill)


இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில்-க்கு இந்தாண்டு மிகவும் சிறப்பானது. ஏனெனில், ஒருநாள், டெஸ்ட் போட்டிகள், ஐ.பி.எல். தொடர் என இவருடைய சாதனைகள் அபாராம். எல்லா ரக கிரிக்கெட்டிலும் இதுவரை மொத்தம் 3,008 ரன்கள், 10 சதங்கள், 14 அரை சதங்கள், 91 சிக்ஸர்கள் மற்றும் 312 பவுண்டரிகள் அடித்துள்ளார்.  கில் இன்னும் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.


உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்படி பல சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். கூகுளில் சுப்மன் கில் ஐ.பி.எல். அரைசதன், ரன் என தேடப்பட்டுள்ளது. சுப்மன் கில் ரிட்ரைட் ஹர்ட் (Retried Hurt), சொத்து மதிப்பு என தேடப்பட்டது போலவே சாரா டெண்டுல்கர் - சுப்மன் கில் பற்றியும் தேடப்பட்டிருக்கிறது. 


ஆம். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் சுப்மன் கில் இருவரும் காதலிப்பதாகவும் டேட் செய்வதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர். இது தொடர்பாக இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ரச்சின் ரவீந்திரா


தனது முதல் உலகக் கோப்பையிலேயே சதம் அடித்த வீரர் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா. இந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார். கூகுளில் இவர் பற்றிய விவரங்கள் தேடப்பட்டுள்ள. 


முகம்மது ஷமி


இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான முகம்மது ஷமி இந்த உலகக் கோப்பை போட்டியில் முக்கியமான போட்டியில் விக்கெட் எடுத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இவரின் உலகக் கோப்பை போட்டி, மொத்த விக்கெட்கள் பற்றி தேடப்பட்டுள்ளன.



  • எல்விஷ் யாதவ்

  • சித்தார்த் மல்ஹோத்ரா ( Sidharth Malhotra)

  •  க்ளன் மேக்ஸ்வெல் ( Glenn Maxwell)

  •  டேவிட் பெக்கம் ( David Beckham)

  • சூரியகுமார் யாதவ் ( Suryakumar Yadav)

  •  டிராவிஸ் ஹெட் ( Travis Head)