ரீல்ஸ் வீடியோ என்ற பெயரில் விபரீத விளையாட்டில் ஈடுபட்ட நண்பர்களின் வீடியோ இணையத்தில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.






ஆபத்தான ரீல்ஸ்கள்:


தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட நிலையில், அதில் எந்த அளவுக்கு பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறதோ, அதில் நெகட்டிவ் விஷயங்களும் உள்ளது. உதாரணமாக, செல்ஃபி கேமராக்கள் வந்த பிறகு மக்கள் விதவிதமாக போட்டோ எடுத்தனர். ஆனால் அதுவே ஒருகட்டத்தில் ரயில் தண்டவாளம் அருகே எடுப்பது, மின்சார ரயிலின் மேலே ஏறி எடுப்பது, வெள்ளத்திற்கு நடுவே எடுப்பது என ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு உயிரை மாய்க்கும் நிலைக்கு செல்கின்றனர். 


இந்த நிலையில் தான் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தற்போது ரீல்ஸ் மோகம் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தூக்கு போடுவது போல வீடியோ எடுக்கபோய் கடைசியில் அதில் மாட்டி சிலர் இறந்து உள்ளனர். சமீபத்தில் கூட ஆயுதங்களுடன் போலீஸ் ஸ்டேஷனில் வாசலில் நிற்பது போல சில வீடியோ பதிவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 


கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குளத்து நீரில் பெட்ரோல் ஊற்றி அதில் தீவைத்து அதற்குள் இளைஞர் ஒருவர் குதிப்பது போன்ற வீடியோ வெளியானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவிய தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 


தூங்கிக் கொண்டிருந்த இளைஞரின் அந்தரங்க உறுப்புக்கு தீ:


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கு அவருடைய நண்பர்கள், அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பு பகுதியில் பெட்ரோல் ஊற்றி, தீ வைக்கிறார்கள். பதறி எழுந்த இளைஞர் அதனை அணைக்க போராடுவதும், அதன் பின்னால் சிரிப்பு சத்தம் ஒலிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பார்த்தாலே பதறும் அளவுக்கு இருக்கும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 




மேலும் படிக்க: Watch Video: ஆபீஸூக்குள் நுழைந்த சிறுத்தை.. பூட்டி வைத்த 12 வயது சிறுவன் - வைரல் வீடியோ!