மகாராஷ்ட்ராவில் சிறுத்தை ஒன்றை சிறுவன் திருமண மண்டப அலுவலகத்தில் பூட்டி வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அந்த நகரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான நேரங்கள் வீடுகள், அலுவலகங்கள் கதவுகள் மூடியே உள்ளது.
இப்படியான நிலையில் மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கு நம்பூர் சாலையில் உள்ள கதவு திறக்கப்பட்டு இருந்த திருமண மண்டப முன்பதிவு அலுவலகம் ஒன்றிற்குள் அழையா விருந்தாளியாக வந்தது. அப்போது அந்த அலுவல கேபினில் மோஹித் விஜய் அஹிரே என்ற 12 வயது சிறுவன் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வாசலின் அருகில் அமர்ந்திருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள்அறைக்குள் சென்றது. ஆனால் சிறுத்தையை கண்டு அசராமல் இருந்த சிறுவன் கணநேரத்தில் மெதுவாக எழுந்து வீட்டிற்கு வீட்டிற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினார். இந்த சம்பவம் சாய் செலிப்ரேஷன் திருமண மண்டபத்தில், காலை ஏழு மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் மண்டப அலுவலக அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
உடனடியான சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் அருகிலிருந்தவர்கள் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருதுறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மயக்க ஊசி போட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்
மேலும் படிக்க: Watch Video: பாக்கும்போதே தல சுத்துதே.. வெறித்தனமான ஒர்க்-அவுட்டால் கணவர் சூர்யாவுக்கு சவால் விடும் ஜோதிகா!