கடன் பிரச்சனைகளை சமாளிக்க ஜப்பான் கண்டுபிடித்த டெக்னிக்...இத படிங்க
பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் யார் கண்ணிலும் படாமல் மறைந்த போக விரும்புபவர்களுக்கு ஜப்பானில் ஒரு நிறுவனம் உதவி செய்து வருகிறது

கடன் பிரச்சனை , காதல் தோல்வி , நிம்மதியின்மை என அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. ஒன்றை சமாளித்தால் அடுத்த பிரச்சனை வரிசையில் வந்து நிற்கிறது. சில நேரங்களில் எதுக்கு இந்த போராட்டம் எல்லாம் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்காவது காணாமல் போய்விடலாம் என ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நாம் புலம்பிவிடுகிறோம். இதனை சாத்தியப்படுத்துவதற்கு ஜப்பானில் ஒரு நிறுவனமே இயங்கி வருவது உங்களுக்கு தெரியுமா.
ஜோகாட்சு என்பவர்கள் யார்
ஜப்பானில் நைட் மூவர்ஸ் என்கிற ஒரு முறை உள்ளது. பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் யார் கண்ணிலும் படாமல் காணாமல் போக விரும்புபவர்களுக்கு உதவி செய்வதே இந்த நிறுவனங்களில் வேலை. இப்படி அடையாளம் இல்லாமல் காணாமல் போனவர்களை ஜோகாட்சு என்று அழைக்கிறார்கள். இரவோடு இரவாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை புதிய ஒரு ஊரில் தொடங்கலாம். உங்களுக்கான புதிய அடையாளத்தை , தங்குமிடத்தை எல்லாம் நிறுவனமே ஏற்பாடு செய்யும் . அதே போல புதிய இடத்தில் உங்களுக்கு ஒரு வேலையையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தரும் .
Just In




நாவோகி இவாபுச்சி என்பவர் நைட் மூவர்ஸ் என்கிற இந்த முறையை முதல் முதலில் கண்டுபிடித்தார். பெண்கள் தொடர்ச்சியாக குடும்பத்தினரால் வன்முறைக்கு ஆளாவதை கவனித்த அவர் இந்த பெண்கள் பாதுக்காப்பான ஒரு இடத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இப்படி ஒரு முறையை அறிமுகம் செய்தார். ஜப்பானியர்கள் மத்தியில் இந்த டெக்னிக் மிக பரவலாகியுள்ளது.