கேரளாவில் கடல் விமான சுற்றுலா அறிமுகமாகிறது. கொச்சி-மூணாறு இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும். கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.


கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், இடுக்கி மாவட்டம் மூணாறு, கொச்சி,ஆலப்புழா என பல்வேறு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. கேரளாவிற்கு சுற்றுலா சென்றால் பார்வையிட பல்வேறு இடங்கள் உள்ள நிலையில், சிறிய பட்ஜெட் டூர் செல்ல ஒரே நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்தது. இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது கேரளா.




கேரள மாநிலம் என்றாலே மலைகள் சூழ்ந்த அழகிய தோற்றம் உட்பட சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த சேவையின் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.


Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!




அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திலும் கடல் விமான சுற்றுலா சேவை தொடங்கப்பட உள்ளது. கேரளாவில் கடல் விமான சுற்றுலா கொச்சியில் இருந்து மூணாறுக்கு இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம்  நடைபெற்றது. இதற்காக 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானம் நேற்று கொச்சி வந்தது. கொச்சி, போல் காட்டி காயல் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட விமானம், மூணாறு அருகே உள்ள மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்தில் தரையிறக்கி சோதனை ஒட்டம் மேற்கொள்ளப்பட்டது. மூணாறில் தரையிறங்கிய கடல் விமானத்தை அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.


Mission Impossible: 62 வயசிலும் மிரட்டும் டாம் க்ரூஸ்! தெறிக்க விடும் மிஷன் இம்பாசிபிள் டீசர் ரிலீஸ்!




கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும். அவ்வாறு பறக்கும் போது நிலப்பரப்பில் உள்ள இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். கேரள மாநிலத்தில் கடல் விமான சேவை சுற்றுலாவுக்கு மட்டுமின்றி அவரச காலங்களிலும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. 9 முதல் 30 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் கடல் விமானங்கள் இருக்கின்றன. ஆனால் கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.


Mission Impossible: 62 வயசிலும் மிரட்டும் டாம் க்ரூஸ்! தெறிக்க விடும் மிஷன் இம்பாசிபிள் டீசர் ரிலீஸ்!




கேரளாவில் கொல்லம்-ஆலப்புழா இடையே கடல் விமான சேவை தொடங்க பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. கொல்லம் அஷ்டமுடி ஏரியில் கடல் விமான திட்டத்தை கேரள மாநில முன்னாள் முதல் முதல்வர் உம்மன்சாண்டி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியும் வைத்தார். ஆனால் மீனவர்களின் போராட்டம் காரணமாக அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. கேரளாவில் தற்போது அந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.