Diwali Weekend: குடும்பமாக வெளியே செல்வதற்கு ஏற்ப, அமைதியான மற்றும் ரம்மியமான பல்வேறு சுற்றுலா தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.


திபாவளி விடுமுறை:


தீபாவளி என்பது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும், நடப்பாண்டில் வியாழக்கிழமையில் தீபாவளி வந்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதன்காரணமாக வார இறுதியுடன் சேர்த்து, மொத்தமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அமைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து மட்டுமே லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்,  தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து, வார இறுதியில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் விதமாக பொதுமக்கள் வெளியே செல்ல விரும்புகின்றனர். அவர்கள் முன் உள்ள வாய்ப்புகளாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்  சிறந்த சுற்றுலா தளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் 40 மலையேற்ற பகுதிகள் - 3 பிரிவுகளில் ட்ரெக்கிங், யாருக்கு எங்கு அனுமதி? முன்பதிவு எப்படி?


வார இறுதிக்கு ஏற்ற சுற்றுலா தளங்கள்:



  • ஊட்டி : இதமான காலநிலை மற்றும் வியத்தகு காட்சிகள் கொண்ட பிரபலமான மலைவாசஸ்தலமாகும்

  • காஞ்சிபுரம் : புகழ்பெற்ற யாத்திரைத் தலம் மற்றும் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள கோயில்கள் மனம் அமைதி பெற வழிவகுக்கின்றன.
    பாண்டிச்சேரி :
    பிரெஞ்சு கலாச்சாரம், கட்டிடக்கலை, கடற்கரைகள் மற்றும் இரவு வாழ்க்கை கொண்ட இந்த கடற்கரை நகரம் சிறந்த பொழுதுபோக்கு இடமாகும்

  • ஏற்காடு : கிழக்குத் தொடர்ச்சி மலையில் பசுமையான புல்வெளிகள், காடுகள் மற்றும் மலைப்பாங்கான சந்தைகள் கொண்ட பசுமையான பகுதி

  • கொடைக்கானல் : இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்புவோருக்கு ஒரு சிறந்த வார விடுமுறை இடமாக இருக்கும். அழகின் அடிப்படையில் மூச்சடைக்கக்கூடிய மலைவாசஸ்தலம்.

  • ஏலகிரி : மலையேற்றப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான மலைவாசஸ்தலம்

  • சென்னை : கலாச்சாரம், நவீனம், வரலாறு மற்றும் சிறந்த உணவுகள் கொண்ட நகரம்

  • மகாபலிபுரம் : அழகிய இயற்கைக்காட்சிகள் மற்றும் கடற்கரை கொண்ட பகுதி

  • ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி : படகு சவாரி மற்றும் அருவியில் குளிப்பதற்கு ஏற்ற இடம்

  • கோதண்டராமசுவாமி கோயில் : தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்

  • பந்திப்பூர் புலிகள் காப்பகம் : கோவையை ஒட்டியுள்ள இந்த சரணாலயம் பல்வேறு விலங்கினங்களுக்கான அடைக்கல பகுதியாக உள்ளது.

  • மெரினா கடற்கரை : தமிழ்நாட்டின் பிரதான கடற்கரையான மெரினா பீச் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்

  • கேளிக்கைப் பூங்கா: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், குழந்தைகள் உடன் சேர்த்து பொழுதுபோக்க ஒரு சிறந்த இடமாகும்

  • திரைப்படங்கள்: தீபாவளியை ஒட்டி பல்வேறு திரைப்படங்களும் வெளியாகி உள்ளதால், திரையரங்குகளும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்.


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தளங்கள் நிறைந்துள்ளதால், பொதுமக்கள் தங்களுக்கு அருகே உள்ள இடங்களுக்கு பயணித்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம்.