ஏபிபி நாடு சார்பில்  சுற்றுலா தலங்கள் குறித்தும், நீங்கள் நேரில் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்கள் குறித்தும், தொடர்ந்து கட்டுரைகளில் வெளியிட்டு வருகிறோம்.ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும், நீங்கள் செல்லும் பொழுது, அதன் பட்ஜெட், முன் தயாரிப்புகள் என்ன என்று தெரியாமல் குழம்பி இருப்பீர்கள் அல்லவா, அதற்கான தீர்வு தான் இந்த தொடர் Travel With ABP.


முட்டுக்காடு படகு குழாம் - Muttukadu Boat House Travel Guide


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  முக்கிய சுற்றுலா தளங்களில், ஒன்றாக உள்ளது முட்டுக்காடு படகு குழாம் ( muttukadu boating  ).இது தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு  முட்டுக்காடு சென்றிருந்தோம். இங்கு படகு சவாரி செய்வதை காட்டிலும், கடல் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தை பார்ப்பதே தனி அழகுதான்.




கடலில் தண்ணீர் சேரும் அந்த அழகை பார்க்கவே,  நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுற்றுலா துறையும் முன்பை விட இப்பொழுது, பராமரிப்பில் தனி கவனம் செலுத்தி  வருகின்றனர்.  மரத்தடி நிழலில் குளுகுளு காற்றுடன் படகுகள் சீறிப்பாய் பார்ப்பது தனி  மகிழ்ச்சி தான். அதேபோன்று  அங்கு கிடைக்கும்,  உணவுப் பொருட்களும்  நாவிற்கு விருந்தாகவும்,  இடத்தின் அழகு கண்ணுக்கு விருந்தாகும் அமையும்.


எங்கு அமைந்துள்ளது -  போக்குவரத்து வசதிகள் ( muttukadu boat house bus )


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் ஈ.சி.ஆர் வழியாக வரும் பேருந்துகளில் வரலாம். பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் திருப்போரூர் அல்லது    கேளம்பாக்கம்   பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் வரலாம்.மாநகர பேருந்துகள் படகு குழாம் அருகே நிற்கிறது. சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. பேருந்து வசதி இருப்பதால்,  போக்குவரத்து செலவு பட்ஜெட்டில் அடங்கிவிடும்.


 




திறந்திருக்கும் நேரம் ( muttukadu boat house timings )


 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  செயல்படுகிறது .


என்ன இருக்கிறது ? ( muttukadu boating )


படகில் பயணிப்பது என்பது நிம்மதி தரும் ஒன்றுதான்.  அதேபோன்று இங்கு இருக்கும்  ஸ்பீட்   படகுகள்.  மோட்டார் படகுகள் ( Motor Boats ) , வாட்டர் ஸ்கூட்டர் ( Water Scooter ) ஆகிய  படகுகளில் பயணம் செய்யும் பொழுது  ஒரு சாகச உணர்வையும்  உணர முடியும். வேகமாக சென்று திருப்புவது, இவை ஒரு  " எக்சைட்டிங் "  விஷயமாக உள்ளது. குறிப்பாக  வாட்டர் ஸ்கூட்டரில்   வேகமாக பயணிப்பது  நிச்சயம் ரசிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதுபோக ரோ ( Row Boat ) படகுகள்  மிதமான வேகத்தில் நீண்ட நேரம் தண்ணீரில் மிதக்கும் அனுபவத்தை கொடுக்கிறது. பெரிய குடும்பத்துடன் செல்பவர்கள் இதில், நிம்மதியாக கதை பேசிக்கொண்டே  அழகை ரசித்தவாறு செல்லலாம். 






விலை என்ன ? ( Muttukadu Boat House Ticket Price )


படகு சவாரி செல்ல வேண்டாம் அதன் அழகை மட்டும் ரசித்தால் போதும்   என்பவர்கள் பத்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு   அழகை  ரசிக்கலாம்.  படகு சவாரி செய்ய எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்


3 பேர் செல்லக்கூடிய ( ROW BOAT ) -   30 நிமிடங்கள் - 350 ரூபாய் 


4 பேர் செல்லக்கூடிய ( ROW BOAT ) -   30 நிமிடங்கள் - 450 ரூபாய் 


2 பேர் செல்லக்கூடிய வாட்டர் ஸ்கூட்டர் ( water scooter ) - ஐந்து நிமிடங்கள் -   1000 ரூபாய்






 3  பேர் செல்லக்கூடிய ஸ்பீடு படகுகள் ( speed boat ) -  10  நிமிடங்கள் -1200  ரூபாய்


 6  நபர்கள் பயணிக்க கூடிய மோட்டார் படகுகள் -   20 நிமிடங்கள் - 1050   ரூபாய்


 10 நபர்கள் பயணிக்க கூடிய மோட்டார் படகு -  20 நிமிடங்கள் - 1300 ரூபாய்


(  மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும்,  முழு படகிற்கான கட்டணம் )


குழந்தைகளை கவரும் VR  கேம்கள்


இங்கு 150 ரூபாயிலிருந்து குழந்தைகளை கவரும் VR   கேம்களும் உள்ளது. நிச்சயம் குழந்தைகளுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்.  அது போக நீங்கள் படகில் பயணம் செய்யும் பொழுதே, கேமராவில்  புகைப்படம் எடுத்தும் கொடுக்கப்படுகிறது. அதற்கான கட்டணம் 100 ரூபாய்  பெறப்படுகிறது.


நீங்கள் இந்தப் படகு சவாரியை முறித்த பிறகு,  அருகில் இருக்கும் கோவளம் கடற்கரைக்கு சென்று  ஒரு குளியலை போட்டு விட்டும் வீட்டிற்கு செல்லலாம். படகு சவாரி நிச்சயம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை