மழை  குறைந்ததால், மலைப்பாங்கான சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு உட்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பார்வையாளர்களின் சுற்றுலா பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் கேரளாவில் உள்ள பிரபலமான இடங்கள் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. கேரளாவில்  ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. பசுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்கள் உள்ளன. கேரளாவில் சுற்றுலா பயணியருக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் பட்ஜெட் சுற்றுலா பிரிவு செயல்படுகிறது.

Continues below advertisement

இந்த பிரிவு விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணியருக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்நிலையில், போக்குவரத்து கழகத்தின் மாவட்ட பட்ஜெட் சுற்றுலா பிரிவு, அக்டோபர் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராகி வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூறப்படுவதாக, அக்டோபர் மாதத்தில் நெல்லியாம்பதி செல்ல, பாலக்காடு, மண்ணார்க்காடு மற்றும் சித்தூர் டிப்போகளிலிருந்து 20  பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலக்கப்பாறை, கவி, மாமலைகண்டம் வழியாக மூணாறு, இல்லிக்கல் மேடு, - இலைவிழா பூஞ்சிறை-, மலங்கரை அணை, அமைதி பூங்கா ஆகிய பகுதிகளுக்கும் அக்டோபர் மாதம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இல்லிக்கல் மேடு, - இலைவிழா பூஞ்சிறை, மலங்கரை அணைக்கு தினமும் 9 டிரிப், மலக்கப்பாறை மற்றும் கவிக்கு தினமும், 8 டிரிப், மாமலைகண்டம் வழியாக மூணாறுக்கு தினமும், 6 டிரிப் மற்றும் அமைதி பூங்காவிற்கு நான்கு டிரிப் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெல்லியாம்பதிக்கு மாவட்ட டிப்போவில் இருந்து 11 டிரிப் பேருந்து இயக்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் 1 - 5, 11 - 12, 18 - 20, 26 ஆகிய தேதிகளில் பேருந்து இயக்கப்படுகிறது. காலை ஏழு மணிக்கு டிப்போவில் இருந்து பேருந்து புறப்படும். 5, 18 தேதிகளில் அமைதி பூங்கா, 4, 19, 26 தேதிகளில் மலக்கப்பாறை, 19, 25ம் தேதி ஆலப்புழா குட்டநாடு ஏரி என பஸ் இயக்கப்படுகிறது. அக்டோபர்  18, 19 தேதிகளில் சொகுசு கப்பல் பயணம் உட்பட கொச்சி சுற்றுலாவும், 4, 14, 25 தேதிகளில் கவிக்கு சுற்றுலா, 11, 18 தேதிகளில் மாமலை கண்டம் வழி மூணாறுக்கு சுற்றுலா செல்லலாம். 2, 11, 20 தேதிகளில் இல்லிக்கல் மேடு, - இலைவிழாபூஞ்சிறை-, மலங்கரை அணைக்கு பயணம் ஏற்பாடு செய்துள்ளது. பயணங்களுக்கு 94478 37985, 83048 59018 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.