உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற அதிகாரிகள்.

Continues below advertisement


கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  




கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய சுற்றுலா தளங்களுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதேபோன்று தற்போது காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவு வருகை புரிகிறார்கள். இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினம் விழா கொண்டாடப்பட்டது. இதில் கொடைக்கானலுக்கு பேருந்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட அதிகாரிகள் மாலை அணிவித்து வரவேற்பு அழைக்கப்பட்டது.




மேலும் மேலதாளங்கள் பொய்க்கால் குதிரை, உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை அமைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து பேருந்து நிலையத்தில் நடனமாட துவங்கினர். இதனைத் தொடர்ந்து சுற்றுலா தினத்தில் பொருளாதார மேம்பாடு விழிப்புணர்வு குறித்து சுற்றுலாத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் நகரில் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்று சுற்றுலாவால் ஏற்படும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு நடத்தினர். பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த இந்த பேரணி பேருந்து நிலையம், எழு ரோடு சந்திப்பு வழியாக பூங்கா சென்றடைந்தது.