அசுஸ் நிறுவனம் இந்திய சதையில் தனது புதிய டில்டிங் செகண்ட் டிஸ்பிலே கொண்ட லேப்டாப் ஒன்றை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. இரண்டு டிஸ்பிலேகளும் FHD NanoEdge Visual தரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால டெக்னாலஜியை, இக்காலத்திலேயே இந்த லேப்டாப் மூலம் வழங்கவிருப்பதாக அசுஸ் இந்தியா நிறுவனம் தனது அதிகாரபுரவ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஐ7 பிராசசர் கொண்டு செயல்படும் இந்த லேப்டாப்பில் 11 ஜெனரேஷன் ஜென் இன்டெல் வரை அப்கிரேட் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஆர் வசதியுடன் கூடிய ஹச்டி கேமரா வசதி கொண்ட இந்த லேப்டாப்பில் ஷட்டர் வசதி இல்லை என்பது சற்று ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. டில்டிங் செகண்ட் டிஸ்பிலே கொண்ட லேப்டாப் இதுவென்பதால் டிசைனிங் சம்மந்தமான செயல்பாடுகளுக்கு இந்த லேப்டாப் பெரிதும் உதவுமென்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிக உயரங்கள், தீவிர வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்ட பல தரநிலைகளில் இந்த லேப்டாப் சோதனைசெய்யப்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக அசுஸ் இந்தியா கூறுகின்றது.
ZenBook Duo 14 8GB RAM கொண்ட லேப்டாப்கள் 99 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், ZenBook Duo 14 16GB RAM கொண்ட லேப்டாப்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது.