திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்திலிருந்து, ஒரே கல்லில் ஆதிசேஷன் சிலையை வடிவமைப்பதற்கான 230 டன் கற்பாறையை, பெங்களூருக்கு கார்கோ லாரி மூலம்கொண்டு செல்லப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஈஜிபுரா என்ற பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை நிறுவப்படுவதற்காக வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் கற்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாநில அரசுகளின் அனுமதிபெற்று கடந்த 2018-ஆம் ஆண்டு 380 டன் கற்பாறையை 240 டயர் கொண்ட கார்கோ லாரி மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஈஜிபுரா பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கோதண்ட ராமர் சிலைக்கு மேல் ஒரே கல்லில் ஆதிசேஷன் (7 தலைகொண்ட நாகம்) சிலை வடிவமைப்பு அதற்காக மீண்டும் அதே இடத்தில் கற்கள் தேர்வு செய்யப்பட்டு 230 டன் கற்சிலையை, 130 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு வந்தவாசி திண்டிவனம் சாலைவழியாக செய்யாறு ஆற்காடு வேலூர் பகுதி வழியாக பெங்களூர் ஈஜிபுரா பகுதிக்கு நேற்று முன்தினம் எடுத்து செல்லப்பட்டது.