மதுரையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததை கண்டித்து, அதே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.



மதுரை கல்வீச்சுக்கு காரணம் திருமாவளவன்: எல்.முருகன் குற்றச்சாட்டு


அப்போது அவர் பேசியது, ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் மதிப்பு குறைந்து விட்டது. இதனால் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதை பொருத்துக்கொள்ள முடியாமல் விசிகவினர் பாஜக மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.




மதுரையில்  பாஜக வின ர்   மீது  நடத்திய கல் வீச்சு  சம்பவத்தை  திருமாவளவன்  கண்டிக்கவில்லை. இதில் இருந்தே திருமாவளவன் தான் தாக்குதலுக்கு காரணம் என்பது உறுதியாகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.