உலக எமோஜி தினம்
இன்றைய அன்றாட வாழ்க்கையில் எமோஜி என்பது அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. வங்கியிலும் அக்கவுண்ட் வைத்திருக்கோமோ இல்லையோ இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ட்விட்டர் தற்போது த்ரெட்ஸ் போன்ற சமூக வளைதலங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளோம். இன்ஸ்டாகிராமில் வருகின்ற ரீல்ஸ்க்கு ரியாக்ஷனாக எமோஜி அனுப்புகிறோம், வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் நமது பதிலை தெரிவிக்கிறோம், ட்விட்டரில் நாம் பதிவிடும் கருத்துக்களுக்கு பலவிதமான எமோஜிகளை இணைத்து பதிவிடுகிறோம். இப்படி போனுக்குள் சென்றாலே எமோஜி இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நாம் எண்ணும் அளவிற்கு எமோஜி நம் வாழ்வில் இணைந்துள்ளது.
எமோஜி உருவான வரலாறு
எமோஜி பீடியாவை உருவாக்கிய ஜெர்மி பர்ஜ் என்பவரால் ஜூலை 17, 2014 அன்று எமோஜி உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டதற்கான காரணம் சமூக வளைதளங்களில் பேசும்போது ஒருவரின் முக பாவனை மற்றும் அவர்களின் உணர்வுகளை முழுமையாக மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதாகும். தற்போது அது உண்மையாகியுள்ளது, உரையாடல்களுக்கு அப்பால் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த எமோஜி உதவுகிறது.
எமோஜி வகைகள்
ஸ்மைலி பேஸ் எமோஜி, பேஸ் வித் டங் எமோஜி, எமோஷன் எமோஜி, அனிமல் அண்ட் நேச்சர் எமோஜி என்றும் மொத்தம் 57 வகையான எமோஜி பிரிவுகள் உள்ளன. 600க்கும் அதிகமான எமோஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 600 மேற்பட்ட எமோஜிகள் இருந்தாலும் இது சில சமயங்களில் சரியான நேரத்தில் சரியான எமோஜியை தேடி கண்டுபிடிக்கவே நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் சிலருக்கு வெறுப்பையும் உண்டாக்குகிறது.
எமோஜியின் அசூர வளர்ச்சி
உலகம் முழுவதும் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, இதில் 7000 மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அகில உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்த மொழி நாளடைவில் உலக முழுவதும் பரவலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எமோஜி என்ற இமோஷனல் மொழி அனைத்து நாட்டு மக்களாலும் தற்போது சமூக வலைதளங்களின் மூலம் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மட்டுமின்றி தற்போது பொருள் வடிவிலும் வளம்வந்து கொண்டிருக்கும் எமோஜியின் அசுர வளர்ச்சி என்றும் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.