உலகில் பெரும்பாலான பிரபலங்கள் மற்றும் பயனர்களை கொண்ட சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். ட்விட்டர் நிறுவனம் உண்மையான, குறிப்பிடத்தக்க மற்றும் அதிகமாக செயல்பாட்டில் உள்ள டுவிட்டர் கணக்குகளுக்கு மட்டுமே டுவிட்டர் நிறுவனம் ப்ளூ டிக் வழங்கி வந்தது. இதை ட்விட்டர் நிறுவனம் 2017ம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டது.

Continues below advertisement

பின்னர். மீண்டும் நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் மீண்டும் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் வழங்கியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வழங்கப்படுவது மதிப்புமிக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக்கை நீக்கியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் பலரும் தோனியின் டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்கை நீக்கியதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதற்கான காரணங்களை கீழே காணலாம்.

Continues below advertisement

  • சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்கின் பயனாளர் தன்னுடைய கணக்கின் பெயரை(@ குறியீட்டிற்கு பின்னால் உள்ள பெயர்) மாற்றினால், ப்ளூ டிக் தானாகவே நீங்கிவிடும்.
  • டுவிட்டர் கணக்கு பயன்படுத்தப்படாமலோ அல்லது முழுமையாக தகவல் பூர்த்தி செய்யப்படாமலோ இருந்தால் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக்கை நீக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, டுவிட்டர் கணக்கு 6 மாதங்களாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ பயன்படுத்தப்படாமல் இருந்தால் ப்ளூ டிக் நீக்கப்படும்.
  • சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்கு தொடர்ந்து டுவிட்டரின் விதிகளை மீறினால், அந்த கணக்கு உடனடியாக சந்தேகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அதன் சரிபார்க்கப்பட்ட நிலை நீக்கப்படும். இதனால், அந்த கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
  • டுவிட்டரின் விதிகளை மீறும் வகையில் தொடர்ந்து டுவிட்களை பதிவிட்டு வந்தாலும், வெறுப்புகளை பரப்பும் வகையில், ஆபாசமான செயல்பாடுகள், தனியுரிமை தகவல் கொள்கை ஆகியவற்றை மீறும் வகையில் செயல்பட்டாலும் ப்ளூ டிக் நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
  • ஒருவேளை சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்கு பின்னர் சரிபார்க்க முடியாத நிலையில் இருந்தால் ப்ளூ டிக் தானாக நீங்கிவிடும்.
  • டுவிட்டர் கணக்கின் பெயரை மற்றும் பயோநோட்டை மாற்றினாலும் ப்ளூ டிக் நீங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பெயர் மாற்றம் செய்து பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்துவதற்கு வாய்ப்பு உள்ள காரணத்தால் ப்ளூ டிக் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.