உலகளவில் அதிகப் பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் வரும் இன்று முதல் ஒரு சில ஃபோன்களில் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப். பிரபல மெட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.  டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. 


சமூக வலைதளங்களிலேயயே வாட்ஸ் அப், இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் ஆகியனதான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தளங்களாக உள்ளன. அண்மையில் வாட்ஸ் அப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது அதாவது வாட்ஸ் அப்பில் 2ஜிபி வரையிலான வீடியோக்களை அனுப்பலாம் எனத் தெரிவித்தது. வெறும் 100 எம்பி அளவிலிருந்த வாட்ஸ் அப் வீடியோ அனுப்பும் வசதி இப்போது 2 ஜிபி ஆக அதிகரிக்கப்பட இருப்பது வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


2 ஜிபி வீடியோ வரை அனுப்பும் திட்டத்தை முதற்கட்டமாக அர்ஜெண்டினாவில் பரிசோதிக்கவும் வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் பயனாளர்கள் மிகவும் பயன்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் வாட்ஸ் அப் இன்று முதல் ஒரு சில ஃபோன்களில் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.


KaiOS, iOS, Android ஆகிய இயங்குதளங்கள் நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் வாட்ஸ் அப் சேவையை இழக்கப் போகும் ஸ்மார்ட் ஃபோன்களாகும்.




iOS போன்கள்:
நீங்கள்  iOS 10 பதிப்பு அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் உள்ள iPhone வைத்துள்ளீர்களா? அப்படி என்றால் உங்கள் சாதனத்தில் WhatsApp-ஐ பயன்படுத்த முடியும். ஒருவேளை அதற்கு முந்தைய பதிப்பு என்றால் அதில் இனி வாட்ஸ் அப் இயங்காது. ஆப்பிள் தற்போது iOS 15 பதிப்பை வழங்கி வருகிறது. இந்த பதிப்பு 3 முதல் 4 ஆண்டுகள் பழைய ஐபோன் மாடல்களுக்கு அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது.


Android போன்கள்: 
உங்கள் மொபைல் ஃபோனில் ஒருவேளை ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய இயங்குதள பதிப்பு இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். 


KaiOS: 
உங்கள் சாதனம் KaiOS இயங்குதளத்தால் இயக்கப்பட்டிருந்தால், WhatsAppஐ இயக்க, KaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. இதில் JioPhone, JioPhone 2 ஆகியவையும் அடங்கும்.


ஒருவேளை நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துபவர் என்றால் உடனடியாக அதை மாற்றிவிடுங்கள்.