பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை முந்த முடியவில்லை.
ஒரு பக்கம் வாட்ஸ் அப் பல நன்மைகளை கொடுத்தாலும் அதன் மூலம் பல போலி செய்திகளும் பரவி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டன. வாட்ஸ்-அப் வாயிலாக தவறான செய்திகளை அனுப்புவது, ஸ்பாம் செய்வது, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது கணக்கை முடக்கவோ அல்லது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது
டெலிட்..
வாட்ஸ் அப்பில் யாருக்காவது தவறாக மெசேஜை அனுப்பிவிட்டாலோ, அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டெக்குடன் மெசேஜ் அனுப்பிவிட்டாலோ டெலிட் செய்யும் ஆப்ஷன் வாட்ஸ் அப்பில் உண்டு. முதலில் குறிப்பிட்ட நிமிடங்கள் என இருந்த டெலிட் ஆப்ஷன் தற்போது 1 மணி நேரம் 8 நிமிடங்கள் என உள்ளது. இந்த டெலிட் டைமிங்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது வாட்ஸ் அப். அதன்படி, வாட்ஸ் அப் மேசேஜை டெலிட் செய்ய 2 நாட்கள் 12 மணி நேரம் கொடுத்து விரைவில் அப்டேட் வரவுள்ளது.
தற்போது சோதனை முறையில், 2.22.15.8 வெர்ஷன் ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. தன்னுடைய போட்டி நிறுவனமான டெலகிராமை தீவிரமாக பாலோ செய்யும் வாட்ஸ் அப் அதன் அப்டேட்களை இங்கேயும் கொண்டு வருகிறது. அதாவது டெலகிராமில் டெலிட் ஆப்ஷன் 2 நாட்களாக உள்ளது. அதனை இப்போதுதான் வாட்ஸ் அப் கொண்டுவரவுள்ளது. அதேபோல் பெரிய சைஸ் ஃபைல்களை அனுப்பும் ஆப்ஷனும் ஏற்கனவே டெலகிராமில் இருக்கிறது.
online..
தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும்.இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வருகிறது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
அதேபோல நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை வேண்டுமானால் தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதில் ஒரு அப்டேட்டாக, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரும் எனத் தெரிகிறது. இதெல்லாம் தற்போது சோதனை முறையில் இருப்பதால் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட்டு அது வரவேற்பை பெற்றால்தான் அனைவருக்கும் கிடைக்கும்.