டெஸ்லா கார் :
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் மாறுபட்ட தயாரிப்புதான் எலெக்ட்ரிக் கார். உலக சந்தையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்தாலும் எலான் மஸ்கின் டெஸ்லா கார்களுக்கு மவுசு அதிகம். காரணம் ஒன்று எலானின் டெஸ்லா கார்கள் முழுக்க முழுக்க அதி நவீன தொழில்நுட்பம் அடங்கியது , இரண்டாவது உலக பணக்காரர் உற்பத்தி செய்யும் கார் என்றால் அந்த காரை பயன்படுத்துவதில் அந்தஸ்தும் அடங்கியிருக்கிறது அல்லவா?
டெஸ்லா கார்கள் உளவு பார்ப்பதாக சொல்லி சமீபத்தில் சீன அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல சீனாவில் உற்பத்தியாகும் டெஸ்லா கார்களை எப்படியாது இந்திய சந்தையில் இறக்கி விட வேண்டும் என எலான் மஸ்க் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது வரையில் அது இழுபறியில் இருந்தாலும் சமீபத்தில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் டெஸ்லா கார் மாடலை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார்.
சார்ஜ் செய்ய வரிசையில் நின்ற கார்கள் :
இப்படி டெஸ்லா கார் மீதான மோகம் கார் பிரியர்கள் மத்தியில் அதிகம்தான்.டெஸ்லா கார்கள் முழுக்க முழுக்க பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் அவற்றிற்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை.மாறாக சார்ஜிங் போர்டும் , மின்சாரமும் தேவை. இந்த நிலையில் சாகச கார் பயிற்சியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கலிஃபோர்னியாவில் டெஸ்லா கார்கள் நீண்ட வரிசையில் நின்று சார்ஜ் செய்துக்கொண்டிருக்கின்றனர். காத்திருப்போரின் பட்டியல் மிக நீண்டதாக இருப்பதால் , அந்த பெண் ”இன்னுமா எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் . கலிஃபோர்னியாவில் டெஸ்லா கார்கள் சார்ஜ் செய்வதற்காக நிற்கும் காட்சி“ என பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு வார இறுதியிலும் இப்படி எலெக்ட்ரிக் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சார்ஜ் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் இணையவாசி ஒருவர். காரணம் எலெக்ட்ரிக் கார்களுக்கான போதுமான சார்ஜிங் போர்ட் வசதிகள் இல்லை என்பதுதான்
இலங்கையில் நிலையை பாருங்கள் :
இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வந்த சூழலில் இலங்கை குடிமக்கள் பலரும் தங்கள் ஊரில் பெட்ரோல் , டீசலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோ எடுத்து அந்த பதிவுக்கு கீழே போஸ்ட் செய்து வருகின்றன. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI