WhatsApp: வாட்ஸ் அப்பில் பெயர் வைக்காமலே குரூப் உருவாக்குவது போன்று புதிய வசதியை மெட்டா விரைவில் கொண்டு வர உள்ளது. 


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது புதிய அப்டேட்டை மெட்டா கொண்டு வந்துள்ளது. 


புதிய அப்டேட்:


அதாவது, வாட்ஸ் அப்பில் பெயர் வைக்காமலே குரூப் உருவாக்குவது போன்று புதிய வசதியை மெட்டா விரைவில் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே வாட்ஸ் ஆப்பில் குரூப் உருவாக்குவதற்கு பெயர் வைப்பது கட்டாயமாக இருந்தது. பொதுவாக ஒரு குரூப் கிரியேட் செய்வதற்கு பெயர் என்பது வைத்தால் மட்டுமே குரூப் கிரியேட் செய்யப்படும். இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில் மெட்டா புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அதாவது, பெயர் கிரியேட் செய்யாமலே குரூப்பை உருவாக்கலாம். அதன்படி, குரூப் கிரியேட் செய்யும் நபரின் எண், உங்களது மொபைலில் என்ன பெயரை வைத்து பதிவு செய்தீர்களோ அது தான் குரூப்பின் பெயராக உங்களது மொபைலில் தோன்றும். உதாரணமாக, ’ரவி’ என்று உங்கள் மொபைலில் பதிவு செய்திருந்தார், அந்த பெயர் தான் உங்கள் மொபைலில் குரூப் பெயராக தோன்றும்.  மேலும், பதிவு செய்யப்படாத எண்ணாக இருந்தால், அந்த நம்பர் மட்டுமே உங்களது மொபைலில் குரூப் பெயராக தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அம்சம் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு கிடைக்கும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.


அண்மையில் வந்த அப்டேட்:


பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும்போது உங்களது மொபைல் நம்பரானது குரூப் அட்மின் மற்றும் உங்கள் மொபைலில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காட்டும். மொபையில் பதிவு செய்யப்படாத  நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்டப்படாது.


மேலும், மொபைலில் சேமிக்கப்படாத எண்களில் உள்ள, வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு கூட சக பயனர் குறுந்தகவலை அனுப்ப முடியும். முன்னதாக, யாரேனும் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்த புதிய அப்டேட்டால் அந்த நிலை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.