சந்திராயன் 3 விண்கலம் தொடர்பாக பகிர்ந்த கேலிச்சித்திரம் ஒன்றைப் பகிர்ந்திருந்த நிலையில் தற்போது தன்னை விமர்சிப்பவர்களை சீண்டும் வகையில் மேலும் ஒரு பகடி செய்யும் வகையிலான பதிவிட்டுள்ளார்.


 


சந்திரயான் -3 பற்றி பிரகாஷ் ராஜ் டிவீட்






நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இது நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.  இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் என கேலிச்சித்திரம் ஒன்றை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 


டிவீட்டில், நபர் ஒருவர் சுற்றி வளைத்து டீ ஆத்தும் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ப்ரேக்கிங் செய்தி, விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” என பதிவிட்டிருந்தார். 


கோபமடைந்த நெட்டிசன்கள்


பிரகாஷ் ராஜின் ட்விட் பா.ஜ.க, பிரதமர் மோடி, இந்திய நாட்டை அவமதிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். மேலும், விஞ்ஞானிகளின் உழைப்பை கேவலப்படுத்துவதோடு மதிப்பற்ற வகையில் ட்விட் உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர். கண்மூடித்தனமான வெறுப்பு இவர்களை நாட்டின் சாதனைகளைக் கூட காண விடாமல் செய்கிறது” என்றும், “சந்திரயான் 3 இஸ்ரோவால் அனுப்பப்பட்டது பாஜகவால் அல்ல” என்றும் நெட்டிசன்கள் கடுமையாக பிரகாஷ் ராஜின் பதிவுக்கு விமர்சனங்களை முன்வைத்தனர். அவரின் ட்விட்டிற்கு பலரும் கமெண்ட் செய்தனர். 


ஆதரவளித்தவர்கள்


“பாஜக அரசின் அவலங்களை அவர் தோலுரிப்பதை பொறுக்க முடியாமல் பலர் இருக்கிறார்கள்” எனவும் மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். பிரகாஷ்ராஜை பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், தன் சார்பில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.


“வெறுப்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு மட்டுமே தெரியும். அவர்கள் அதை மட்டுமே பார்ப்பார்கள். கேரள டீக்கடைக்காரை கொண்டாடும் வகையிலான ‘ஆர்ம்ஸ்ட்ராங் டைம்ஸ்’ ஜோக்கைதான் நான் குறிப்பிட்டேன். இது உங்களுக்கு ஜோக் ஆக தெரியவில்லை என்றால் அந்த ஜோக்கே உங்கள் மீதுதான். வளருங்கள் என பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டிருந்தார்.


 நிலாவில் டீ ஆத்தும் சேட்டன்


எப்படி தமிழில் நிலாவில்  பாட்டி வடை சூடும் கதை பிரபலமோ அதேபோல் கேரளாவில் நிலாவில் டீ ஆத்தும் சேட்டன் என்கிற பிரபல கதை ஒன்றையே தான் கேலிச்சித்திரமாக பகிர்ந்திருந்ததாக தெரிவித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். இதே கேரள சேட்டனை வைத்து இலங்கையிலும் இரண்டு நகைச்சுவைகள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும்  சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலாவில் இறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரோவைப் பாராட்டியிருந்தார் பிரகாஷ் ராஜ்.


செவ்வாய்கிரகத்திற்கே சென்றுவிட்டார் டீமாஸ்டர்






இந்த முறை ” நான் பகிர்ந்த பகடியை இன்னும் புரிந்துகொள்ளாத மூடர்களே இப்போது எங்கு போனார் அந்த மலையாளி டீக்கடைக்காரர் என்று கேட்கிறீர்கள் ஆனால் அவர் உங்கள் எல்லாரைவிடவும் புத்திசாலி. பூமியில் மட்டுமில்லாமல் மார்ஸ் ஜூபிட்டர் என்று அவர் தனது தொழிலை பெரிதாக்கிவிட்டார்” என்று மேலும் ஒரு புதிர் போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த ட்வீட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.