Crime: திடீரென உறவை முறித்துக் கொண்டதால் காதலியை, இளைஞர் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி விசாலாட்சி (35).  விசாலாட்சிக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் (29) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் விசாலாட்சி சமீபத்தில் முருகனுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை, முருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பலமுறை விசாலாட்சியிடம் பேசி உள்ளார்.  இதனால் இவர்கள் இருவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இருப்பினும், விசாலாட்சி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் கடும் கோபத்தில் இருந்த முருகன்  விசாலாட்சியை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.


கடந்த 19-ந்தேதி இரவு அவர், விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியின்றி கையில் மண் எண்ணெய் கேனுடன் சென்றார். அங்கு விசாலாட்சி, முருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விசாலாட்சியை கடுமையான வார்த்தைகளால் பேசினார் முருகன். வாக்குவாதம் நீடித்த நிலையில், கடும் கோபத்தில் இருந்து முருகன் விசாலாட்சி கையில் வைத்திருந்த மண் எண்ணெய் கேனை பிடிங்கி அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 


இதனால் விசாலாட்சி அலறி துடித்தப்படி அங்குமிங்கும் ஓடினார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் மீது பற்றி ஏரிந்த தீயை அனைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் பெண்ணை உயிரோடு ஏரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க 


Morning Breakfast Scheme: அனைத்து அரசுப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


AIADMK: பரபரப்பில் இபிஎஸ்.. பதற்றத்தில் ஓபிஎஸ்.. பொதுக்குழு தீர்மானத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!