உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமாக விளங்குவதில் வாட்ஸ்-அப் முன்னணியில் வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், செல்போன்களின் மாற்றங்களுக்கு ஏற்பவும் வாட்ஸ்-அப் நிறுவனமும் அடிக்கடி பல்வேறு அப்டேட்களை தங்களது செயலியில் செய்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்காக மல்டி-டிவைஸ் பயன்பாட்டை வெளியிட்டது. இது ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஐ.ஓ.எஸ். செயலியை பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த புதிய அப்டேட்டில் நமது போனை இணைக்காமலே ஒரே நேரத்தில் நான்கு சாதனத்தில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இது தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. எதிர்காலத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும். பயனர்கள் சமீபத்திய பதிப்பிற்கு பயன்பாட்டை புதுப்பிக்கும்போது பல சாதனங்களில் இந்த அம்சம் இயல்பாகவே இயக்கப்படும். இல்லாவிட்டால் பயனாளர்கள் பல சாதனங்களின் பீட்டாவில் சேர வாய்ப்புள்ளது.
இந்த புதிய அப்டேட்டில் பல ஐபோன் பயனாளர்களும், ஆண்ட்ராய்ட் போன் பயனாளர்களும் வாட்ஸ்அப் வெப் மூலம் இணைக்கப்பட்ட துணை சாதனம் மூலமாக செய்திகளை அனுப்பவும், பெறவும் இயலவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், பழைய உரையாடல்களை காட்டவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
நீங்களும் இதுபோன்ற சிக்கலை சந்தித்தால் கீழ்க்கண்ட முறையை கையாளுங்கள்.
நீங்கள் ஐ-போன் பயனாளராக இருந்தால்:
- உங்கள் ஐ-போனில் வாட்ஸ் அப்பிற்கு செல்லவும்
- பின்னர், வாட்ஸ்-அப் செட்டிங்சை திறக்கவும்
- அதில் லிங்க்ட் டிவைசஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்
- அங்கே மல்டி – டிவைஸ் பீட்டாவில் நீங்கள் இணைந்திருந்தால் அது காட்டும். அதை கிளிக் செய்யவும்
- பின்னர், லீவ் பீட்டா என்ற ஆப்ஷனை கிளிக்செய்யவும்
அர்ச்சகர் ரங்கராஜனுக்கு ஆதரவாக களமிறங்கும் ஆர்எஸ்எஸ் முன்னணி அமைப்பு! என்ன நடந்தது?
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயனாளராக இருந்தால் :
- நீங்கள் வாட்ஸ் அப்பை க்ளிக் செய்து அதன் உள்ளே செல்லவும்
- அதன் வலது மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்யவும்
- அதில் லிங்க்ட் டிவைஸ் என்ற ஆப்ஷன் இருக்கும்.
- அதில் மல்டி-டிவைஸ் பீட்டா என்ற ஆப்ஷன் இருக்கும்
- அதை கிளிக் செய்து அதில் இருந்து வெளியே வரவும்
பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சி - பிரபல ரவுடி குருவி விஜயை சுட்டுப்பிடித்த போலீஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்