Whatsapp Update : இன்ஸ்டா ஸ்டோரியைப் பார்ப்பதுபோல வாட்சப் ஸ்டேடஸ் : வரவிருக்கும் புதிய அப்டேட் பத்தி தெரியுமா?

ஏற்கெனவே வாட்சப்பில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் ஆப்ஷனை தடுப்பதற்கான அப்டேட்களும் ஐஓஎஸ்ஸில் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு அவை கொண்டுவரப்படவில்லை

Continues below advertisement

வாட்சப் சாட் பட்டியல் வழியாகவே நேரடியாக ஒருவருடைய வாட்சப் ஸ்டேடஸைப் பார்க்கும் அப்டேட்டை அந்த நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. இதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போலவே வாட்சப்பிலும் ஸ்டேட்டஸைப் பார்க்கலாம். தற்போது குறிப்பிட்ட சில பீட்டா வெர்ஷன்களில் மட்டும் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. தொடக்க நிலையாக ஆப்பிள் ஐஓஎஸ் ஃபோன்களில் இந்த அப்டேட் அறிமுகமாகிறது. ஏற்கெனவே வாட்சப்பில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் ஆப்ஷனை தடுப்பதற்கான அப்டேட்களும் ஐஓஎஸ்ஸில் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு அவை கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையேதான் தற்போது ஐஓஎஸ்களுக்கு மேலும் ஒரு அப்டேட்டை நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Continues below advertisement

முன்னதாக, வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தாலும் உங்கள் மொபைல் எண்ணை மறைத்துவைக்கும் ஆப்ஷனை விரைவில் அறிமுகம்செய்யவுள்ளது வாட்ஸ்  அப் நிறுவனம்.


உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில்  மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp முதன்மையானதாக உள்ளது. WhatsAppன் உரிமையாளர்கள் தங்கள் பயனர்களை கவர்ந்திழுக்க மற்றும் அவர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க தளத்தை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் புது அப்டேட்டை விரைவில் கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் இருந்தால் அந்த குரூப்பில் இருக்கும் யாராக இருந்தாலும் உங்கள் போன் நம்பரை தற்போது எடுத்துக்கொள்ள முடியும். தற்போது பலரும் குரூப்பில் இருந்து உங்கள் நம்பரை எடுத்தேன் எனக் கூறி வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வார்கள். அந்த அனுபவம்  உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த பிரச்னைக்கு தற்போது முடிவுகட்டவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். அதற்கான அப்டேட்டை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தாலும் உங்கள் மொபைல் எண்ணை மறைத்துவைக்கும் ஆப்ஷனை விரைவில் அறிமுகம்செய்யவுள்ளது வாட்ஸ் அப்.

தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆப்ஷனுக்கு வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து பயனர்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது 

பயனாளர்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த மீண்டும் தயாராகி வருகிறது வாட்ஸ்அப். இந்த முறை, பயனர்களை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் கவனம் செலுத்தி வருகிறது. உள்நுழைவு ஒப்புதல் என்று அழைக்கப்படும் இந்த அம்சம், two-step சரிபார்ப்பு அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல சாதன பயனர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் வேறு சாதனத்திலிருந்து உள்நுழையும்போது மெசேஜ் பெற இந்த புதிய அம்சம் அனுமதிக்கும். ஐபோனில் கடந்தகால குழு உறுப்பினர்களை பார்க்க பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola