மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே மண்ணிப்பள்ளம் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற இப்பள்ளியில் தற்போது 38 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இதற்கு காரணம் இந்த பள்ளி கட்டிடம் முழுவதும் சேதமடைந்து கட்டிடத்தின் மேற்கூறை இடிந்து விழுந்து வருவதால், தங்கள் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு தனியார் பள்ளிகளுக்கு மாற்றி விட்டனர்.




இந்நிலையில் தற்போது கூட பற்றின் மேற்கூறை இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் பள்ளி கட்டிடம் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பல முறை இடிந்து விழுந்த நிலையில், உடனடியாக சீரமைத்து தர வேண்டும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் பலமுறை மனு செய்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள்  சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டும், இதுநாள் வரை அரசு கண்டுகொள்ளவில்லை.


TTD Job: திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன? முழு விவரம்!




தற்போது இரண்டு ஆசிரியர்களுடன் 38 மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.  பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்துவிட்ட நிலையில், மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளி வருவதை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரிந்து  வரும் இரண்டு ஆசிரியர்களும் தங்கள் சொந்த பணம் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து  தகரக் கொட்டகை அமைத்து அதில் பாடம் நடத்தி வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஒரே தகரக் கொட்டகைகளில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். 


Trisha Political Entry: ‛எப்படி கிளம்புச்சின்னே தெரியல..’ அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!




அருகில் அரசு பள்ளிகள் எதுவும் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி பயில நெடுந்தூரம் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் அல்லது மணல்மேடு செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இங்கு கல்வி  பயின்று வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளதால் வறுமையின் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழலில், இங்கேயே தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துள்ளனர்.


Freebies Culture: பாஜக அரசுக்கு ஒரு விதி..எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? ட்விட்டரில் கேள்வி எழுப்பிய அமைச்சர் பிடிஆர்




தற்காலிக தகரக் கொட்டகையில் பள்ளி நடந்து வந்தாலும், தற்போது  மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், இதில் கல்வி பயில்வது கடினம் என்றும், மேலும் தகரக்கொட்டைகையில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.