இந்துக்களின் முக்கிய பண்டிகைகள் ஒன்றான விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கரூர் மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

Continues below advertisement

விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாட, இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யபடும். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜை நடத்தப்படும். அதன்பிறகு சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி மற்றும் அமராவதி ஆறு உள்பட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

Continues below advertisement

இந்த நிலையில், கரூர் மாநகரப்  திருமாநிலையூர் பகுதியில் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 500-க்கு மேற்பட்ட சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இத்தொழில் பத்தாண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்தவர் அப்பகுதியில், விநாயகர் சிலை செய்து வருகிறார். இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உறவினர்களை வரவழைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஊர்வலத்துக்காக 6 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுவைக்கப்பட்டுள்ளது. ஒரு அடி முதல் ஆறடி சிலை வரை தயார் நிலையில் உள்ளது. 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண