செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு எப்படி CALL வசதி அவசியமோ அது போல் காலப்போக்கில் வாட்ஸ் அப் செயலியும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதற்காகவே பலரும் பட்டன் போனில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு மாறி விட்டனர்.


வாட்ஸ் அப் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, தற்போது வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது இடைநிறுத்தும் (Pause) வசதி இல்லை.  வாய்ஸ் ரெக்கார்டை அனுப்பலாம். அல்லது டெலிட் செய்யலாம்.






தற்போது இந்த வசதியைத் தான் வாட்ஸ் அப் அப்டேட்டாக கொண்டு வரவுள்ளது. இந்த அப்டேட் வந்த பிறகு வாய்ஸ் மெசேஜை ரெகார்ட் செய்யும் போது வேண்டுமென்றால் பாஸ் செய்துவிட்டு மீண்டும் ரெக்கார்ட் செய்ய முடியும். இப்போது இந்த வசதியை வாட்ஸ் அப் சோதனை செய்தே வருகிறது. சோதனை வெற்றியடைந்த பிறகு இந்த அப்டேட் பீட்டா வெர்ஷனுக்கு அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கொண்டு வரப்படும்.




இதற்கிடையே, நவம்பர் 1 ஆம் தேதி முதல் பழைய செல்போன்கள், ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களின் பழைய வெர்சன்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையை நிறுத்த வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி, ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் 10 வது வெர்சனுக்கு குறைவான வெர்சன்களில் இயங்கும் மொபைல்கள், ஆண்டிராய்ட் வெர்சன் 4.1 க்கு முந்தைய வெர்சன்களின் இயங்கும் செல்போன்கள், கை ஓ.எஸ். 2.5.0 வெர்சனை விட பழைய வெர்சன்களில் இயங்கும் மொபைல்களுக்கான சேவையை நிறுத்த வாட்ஸ் அப் முடிவு செய்திருக்கிறது.