வயிறு உப்புசம், வாயு தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் பொதுவானவை. எப்போது வேண்டுமானாலும் வரும். அதிகமாக சாப்பிட்டாலோ, நிறைய மசாலா சேர்த்த உணவுகளை சாப்பிட்டாலோ, நேரம் தவறி சாப்பிட்டாலோ, வாயு அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலோ, இப்படி பல காரணங்களால் இந்த பிரச்சனைகள் வரும்.  இதை சமாளிக்க சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை லூக் குடின்ஹோ அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார்.




ஓரிரு நாளில் இது சரியாகி விடும். இது போன்ற பிரச்சனைகளை அன்றாடம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால், இது  பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு அறிகுறிகளாக இருக்கும். தொடர்ந்து இருந்தால், வயிறு புண், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் சமநிலையின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகள்  வரலாம்.இதை ஆரம்பத்திலே கண்டறிந்து உணவு முறையை மாற்றினாலே போதுமானது. இந்த பிரச்சனைகள் குணமாகும்.


வயிறு உப்புசம், வாயு தொல்லை, மற்றும் அஜீரணம் நீங்க இந்த மூலிகை டீயை முயற்சி செய்து பாருங்கள்.


 






மூலிகை டீ தயாரிப்பதற்கு தேவையான  பொருள்கள் 


ஓமம் - 1 டீஸ்பூன்


சீரகம் - 1 டீஸ்பூன்


பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்


தண்ணீர் - 300 மிலி


செய்முறை


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஓமம், பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து 5-7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க  வைக்கவும். பிறகு அதை வடிகட்டி 200மிலி அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்.




அஜீரணப் பிரச்சனைகள் நீங்கி ரிலாக்ஸாக இருக்கலாம்.