WhatsApp Update:போட்டோ எடுக்க பிடிக்குமா வாட்ஸப்பில் வெளியாகும் சூப்பர் அப்டேட் - என்ன தெரியுமா?
WhatsApp Update: வாட்ஸப்பில் வெளியாக உள்ள அப்டேட்களை பற்றிய தொகுப்பு இது.

வாட்ஸப்பில் ’Motion photos' பகிரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்டேட்களுடன் வாட்ஸ் அப்:
வாட்ஸப்பில் பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சமீபத்தில் அப்டேட் செய்யவில்லை என்றால் அப்டேட் செய்துவிடுங்க.
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதி கிடைக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன் Background மாற்றிகொள்ள முடியும். அதேபோல வாட்ஸ் அப்பிலும் கிடைக்கிறது. வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில் “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

'Motion photo. அனுப்பும் வசதி:
வாட்ஸப் beta for Android 2.24.24.9 வர்சனில் Motion photo அனுப்பும் வசதி இருப்பதாக வாட்ஸ் அப் அப்டேட்கள் பற்றி தகவல் வெளியிடும் WABetainfo எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்கள் பகிர்வது போல, அனிமேட்டட் வகையிலான புகைப்படங்களை பகிரும் வசதி உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை பகிரும் ஆப்சனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை மெட்டா நிறுவனம வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
'motion photos' வசதி என்பது “Motion Pictures’ தான். இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை சேர்த்து சிறு வீடியோ போல உருவாக்க முடியும். மோசன் பிக்சர் அனிமேசன் என்று கூட சொல்லலாம். இதை செய்ய பெரிய மெனக்கடல் இல்லாமல், உங்களுக்கு தேவையான புகைப்படங்களை செலக் செய்து மோசன் போட்டோக்களாக மாற்றிவிடலாம். இந்த வசதி ஏற்கனவே சில ஸ்மாட்போன் மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வாட்ஸப்பில் இருந்தால் எல்லாரும் பயன்படுத்த முடியும். இந்த நோக்கத்திடன் மெட்டா இந்த வசதியை உருவாக்கி வருறது. இது இருந்தால் நீங்கள் அனுப்பும் மெட்டா புகைப்படங்கள் அனிமேசன் ஃபாமில் தெரியும். அதோடு, மோசன் போட்டோ வசதி இல்லாத ஸ்மாட்போன்களிலும் இதை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.