பைக்கில் செயினை கட்டி நாயை தரதரவென இழுத்து வந்த நபர்! வெளுத்து வாங்கிய பெண் – வீடியோ
ராஜஸ்தானில் ஒருவர் தனது பைக்கில் செயினை கட்டி நாயின் கழுத்தில் மாட்டி தரதரவென இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் ஒருவர் தனது பைக்கில் செயினை கட்டி நாயின் கழுத்தில் மாட்டி தரதரவென இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் பலிச்சா பகுதியில் ஒரு நபர் ஒருவர் தனது பைக்கில் செயினை மாட்டி மறுமுனையை நாயின் கழுத்தில் கட்டி தரதரவென இழுத்து வந்தார். இதில் நாய்க்கு ரத்தம் சொட்ட சொட்ட ஊற்றியது. மேலும் அந்த நாய் வலி தாங்க முடியாமல் கூக்குரலிட்டது.
இதைப்பார்த்த அப்பகுதி பெண் ஒருவர் அந்த நபரை சரமாரியான கேள்விகளால் வெளுத்து வாங்கினார். இதையடுத்து அந்த நபர் நாயின் கழுத்தில் இருந்து செயினை அகற்றி அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் முழுவதையும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய் அசையவே சிரமப்படுவதையும், அதன் பாதங்களில் இருந்து ரத்தம் வெளியேறுவதையும் வீடியோ காட்டுகிறது. சாலையில் ரத்தக் கறைகளையும் காண முடிந்தது.
வீடியோவில் அந்த பெண், “நீ என்ன பைத்தியமா? நீ என்ன மிருகமா?” என கேள்விகளை துளைத்தார். இந்த சம்பவம் கோவர்தன் விலாஸ் காவல் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் “அந்த பெண்ணுக்கும் அவரது மகனுக்கு பாராட்டுகள். கர்மாவுக்கு காத்திரு” என கூறியுள்ளார்.
சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் அந்த நபர் மீது கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.