பிஎஸ்என்எல் BSNL நிறுவனம் பயனர்களின் சிம்மை ஆண்டு முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க உதவும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பயனர்களிடேய வரவேற்பை பெற்றுள்ளது.

Continues below advertisement

வருடாந்திர திட்டம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பயனர்களின் சிம்மை ஆண்டு முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க உதவும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வருடாந்திர திட்டத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் குறைந்த விலையில் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை வழங்கிவிடும் என கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரூ.1,499 ரீசார்ஜ் திட்ட விவரங்கள்: 

இந்த திட்டத்தின் விலை ரூபாய் 1,499 ஆகும். இது அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி அன்லிமிடெட் டேட்டா இல்லாமல் மொத்தமாக 24GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS குறுஞ்செய்தி ஆகியவற்றை வழங்குகிறது.  இதில் முக்கியமானவை என்னவென்றால், பொதுவாக 336 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், மேலும் ஹோலி சலுகையின் ஒரு பகுதியாக, அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் கூடுதலாக 29 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து, இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இது பலன்களை அதிகம் சமரசம் செய்யாமல் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வரும் ஒரு மலிவு திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டா, அழைப்பு மற்றும் 1 வருட செல்லுபடியாகும் காலத்துடன் SMS கூட அடங்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வருடங்கள் செல்லுபடியாகும் மற்றொரு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.2,399 ஆகும்.

இது பொதுவாக 395 நாட்களும், தற்போது நடந்து வரும் ஹோலி சலுகையின் ஒரு பகுதியாக 425 நாட்களும் செல்லுபடியாகும். பலன்களைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 2GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். இந்த இரண்டு திட்டங்களும் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப் மற்றும் மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்கள் மூலம் கிடைக்கின்றன. இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது