வாட்ஸ் அப்


உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை மேம்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டுமென்படு மட்டுமின்றி பல பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியும் இந்த அப்டேட் கொடுக்கப்படுகிறது.


மெசேஜ்:


வாட்ஸ் அப்பில் தற்போது மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் அந்த எண்ணை நமது செல்போனில் சேமித்திருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு நாம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டிய நிலை வரும், ஆனால் அவரது எண்ணை சேமித்துவைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி ஒரே தேவைக்காக ஒருவரின் எண்ணை சேமிக்காமலேயே வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பமுடியும். 




எப்படி? 


ஒரே நிமிடத்தில் எண்ணை சேமிக்காமலேயே வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும் 


உங்கள் செல்போனில் எதாவது ஒரு ப்ரவுசரை ஓபன் செய்து "https://wa.me/phonenumber" என்ற பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும், இதனை காப்பி செய்து பேஸ்ட் செய்யாமல் phonenumber என்ற இடத்தில் உங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும் 


Ex: "https://wa.me/123456789"


பின்னர், பச்சை கலர் பாக்ஸ் ஒன்று ஓபன் ஆகும். அதில் "Continue Chat" என வரும். அதனை க்ளிச் செய்தால் உங்கள் வாட்ஸ் அப் கணக்குக்குச் செல்லும்.அதன் மூலம் மெசேஜ் செய்ய முடியும்.




ஹேக்..


பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் அப் மேம்படுத்திக்கொண்டே இருந்தாலும் மறுபக்கம் ஹேக்கர்ஸ் தங்களது வேலையைக் காட்டிக்கொண்டேதான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஒரே போன்காலில் வாட்ஸ் அப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் டிஜிட்டல் மோசடியை ஹேக்கர்ஸ் கையில் எடுத்துள்ளனர்.


இது குறித்த எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் போனுக்கு உங்களுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வரும். அதனை எடுத்து பதிலளித்தால் 67 அல்லது 405 என தொடங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும். அதனை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் கணக்கு ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். அதன்பின்னர் உங்கள் கணக்கை அவர்கள் நிர்வகிக்கவும், உங்கள் தகவல்களை திருடவும் தொடங்கிவிடுவார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண