நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை மொபைலின் ஃபேக்டரி ரீசெட்தான். சிலர் தவறுதலாக மொபைல் ரீசெட் கொடுத்துவிட்டால் அவர்களின் மொபைல் ஆவணங்கள் அனைத்துமே அழைந்துவிடும். அவற்றை மீண்டும் மீட்க முடியாது. மொபைலில் நாள்பட்ட ஹேங்கிங் பிரச்சனை அல்லது மொபைல் வாங்கி பல நாட்களுக்கு பிறகு நீங்கள் அதனை புதுப்பிக்க விரும்பினால் ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டியது அவசியம் . இந்த தொகுப்பின் மூலம் நீங்கள் உங்கள் ஆண்ட்ராட் மொபைலை எவ்வாறு ரீசெட் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களது மொபைலை ரீசெட் செய்ய முடிவெடுத்துவிட்டால் முதலில் உங்களது அனைத்து கணக்குகளையும் லாக் அவுட் செய்ய வேண்டியது அவசியம் . கூகுள் அக்கவுண்டுகளை லாக் அவுட் செய்து விடுங்கள் , அதே போல வங்கிக்கணக்குகள் இருந்தால் அதனையும் லாக் அவுட் செய்வது அவசியம்.அதே நேரம் உங்களது பிற ஆவணங்கள் , புகைப்படங்கள் , கோப்புகள் உள்ளிட்டவற்றை ஒரு பெண்ட்ரைவ் அல்லது ஹார்ட் டிஸ்க் அல்லது எஸ்.டி கார்ட் உதவியுடன் நகலெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஃபேக்டரி ரீசெட் செய்யும் பொழுது உங்கள் மொபைலின் அனைத்து தகவல்களும் அழிந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரி எப்படி ஆண்ட்ராய்ட் மொபைலில் ரீசெட் செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு போனை எப்படி ஃபேக்டரி ரீசெட் செய்வது?
படி 1: இந்தச் செயல்முறையைத் தொடங்கும் முன், சாதனத்திலிருந்து மைக்ரோ எஸ்டி கார்டையும் உங்கள் சிம் கார்டையும் அகற்றவும்.
படி 2: 'ரீசெட்' ( Reset) என்பதைத் தேடி, அதிலிருந்து கிடைக்கும் வசதிகளில் 'Factory Data Reset' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது, ரீசெட்டை (Reset) அனுமதித்து, ஃபோனின் cleaning and wiping process செயல்முறையை முடிக்கவும், பின்னர் மறுதொடக்கம் செய்யவும்.
படி 4: இந்த செயல்முறை முடிந்ததும், மறுதொடக்கம் செய்யும் போது Android வரவேற்புத் திரை காட்டப்படும். இது புதிய பயனாளர் அடையாளங்களை கொடுத்து உள்நுழைய வேண்டும்.
கவனிக்கவேண்டிய விஷயம்: ஃபேக்டரி ரீசெட் என்பது ஆண்ட்ராய்ட் மொபைல் அனைத்திற்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பிராண்டுகளுக்கு பிராண்டு வேறுபாடு கொண்டது.
அவற்றின் செயல்முறை சற்று வித்தியாசமானது. உதாரணமாக, Samsung Galaxy S21 இல்,Settings > General Management > Reset and then select 'Factory Data Reset' என்பதற்குச் சென்று, கீழே ஸ்க்ரோலிங் செய்வதற்கு முன், 'Factory Data Reset' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Reset' மற்றும் 'Delete All' என்பதை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் மொபைல் ரீசெட் துவங்கும்