வாட்ஸ் அப்..
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை மேம்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டுமென்பதோடு மட்டுமின்றி பல பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியும் இந்த அப்டேட் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புது அப்டேட்டை வாட்ஸப் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது விரைவில் சோதனைமுறையில் கொண்டுவரப்பட்டு பின்னர் அனைவருக்கும் இந்த அப்டேட் வருமென தெரிகிறது.
என்ன அப்டேட்..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அப்டேட் என்றாலும் இது ஸ்டேட்டஸில் கொண்டுவரப்படும் அப்டேட் இல்லை. ஆனால் அது தொடர்புடையதுதான். நாம் ஸ்டேட்டஸ் வைத்தால் அதுகுறித்து நண்பர்கள் யாரேனும் ரிப்ளை செய்தால் அது வழக்கமான ஒரு மெசேஜ் மாதிரியே சாட்டில் தெரியவரும். இதில்தான் அப்டேட்டைக் கொண்டுவர வாட்ஸ் அப் ப்ளான் செய்து வருகிறது. Status Reply Indicator என்ற இந்த அப்டேட்டை விரைவில் பீட்டா பயனர்களுக்கு சோதனையாக கொண்டு வரும் எனத் தெரிகிறது.
லிங்க்..
முன்னதாக ஸ்டேட்டஸில் லிங்க் ப்ரிவியூ காட்டும் அப்டேட்டை வாட்ஸ் அப் பரிசோதித்து வருகிறது. ஏதாவது நல்ல நியூஸ் லிங்க் என்றாலோ,வீடியோ லிங்க் என்றாலோ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து அதை நம் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவோம். அது ஒரு லிங்காகவே இருக்கும், அதனை யார் க்ளிக் செய்தாலும் அந்த லிங்க் தொடர்பான வெப் பேஜ் ஆபன் ஆகும். இந்த முறையில் தற்போது அப்டேட் கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப். அதாவது ஸ்டேட்டஸாக வைக்கப்படும் லிங்குக்கு இனி ப்ரிவியூ காட்ட வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது அந்த லிங்க் என்ன என்பதை அங்கேயே சிறு விளக்கமாககாட்டும், அதில் ஆர்வம் இருந்தால் மேற்கொண்டு க்ளிக் செய்து முழு செய்தியையோ வீடியோவையோ பார்க்கலாம். வேண்டாமென்றால் விட்டுச்செல்லலாம்.
தற்போது iOS beta versionல் சோதனை முறையில் இருப்பதாகவும், இனி விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் வெப் வெர்ஷனில் கொண்டு வர வாட்ஸ் அப் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்