‛அந்த கண்ணைப் பார்த்தாக்க...’ என, எந்த நேரத்தில் பாட்டு எழுதினார்களோ... இன்ஸ்ட்டாவை திறந்தாலே, இந்த கண்ணை தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவிற்கு சோஷியல் மீடியாவில் துடிப்போடும், துள்ளலோடும் இருக்கிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் பெட்டிப்பாம்பாக தெரிந்த பெண், மாஸ்டரில் பீஸ்ட்டராக மாறியதால், அதன் பின் அவரை பின்தொடர்ந்தவர்களுக்கு ஷாக்...


மாளவிகா... ஒரு மாடர்ன் மெழுகு சிலை. அவரது இன்ஸ்ட்டோ போட்டோக்கள், குளுகுளு மணாலி. அவரது போட்டோ பதிவுகளை பார்த்து, இன்னும் பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான், மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ரபூரில் உள்ள டடோபா அந்தேரி தேசிய பூங்காவிற்கு சமீபத்தில் விசிட் அடித்தார், மாளவிகா. மாளவிகா ஒரு இயற்கை விரும்பி. அவர் அடிக்கடி, வெளியூர் பயணம் செய்து, அங்கு தன் அனுபவங்களை பகிர்வார். கடந்த சில நாட்களாக தீவுகளில் வலம் வந்தவர், திடீரென வனத்தில் ஒதுங்கியதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.






3 நாட்கள், அந்த தேசிய பூங்காவில் ட்ரெக்கிங் சென்ற மாளவிகா, வழக்கம் போல அங்கு சந்தித்த அனுபவங்களை பகிர தொடங்கியுள்ளார். புலி, சிறுத்தைகள் அதிகம் நடமாடும் அந்த வனப்பகுதியில், தில்லாக கேமராவோடு சென்று, அனைத்தையும் படம் பிடித்து அதையும் பகிர்ந்துள்ளார். 


கடந்த 3 நாட்களில் 6 புலிகள், 3 சிறுத்தைகளை கண்ட அவர், அவற்றை தனது கேமராவில் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆபத்தான அந்த மிருகங்களை அருகில் இருந்து , அந்த போட்டோக்களை எடுத்துள்ளார். மரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுத்தையை தத்ரூபமாக அவர் கேமராவில் க்ளிக் செய்த வீடியோவையும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா.






 


கவர்ச்சி போட்டோக்களை மட்டுமே மாளவிகாவின் பக்கத்தில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, பயங்கர திகிலூட்டும் இந்த காட்சிகள், அதிர வைத்துள்ளது. 6 புலிகள், 3 சிறுத்தைகள் என 3 நாளில் தான் பார்த்த பயங்கர விலங்குகள் குறித்து மாளவிகா பகிர்ந்து இருக்கும் பதிவுக்கு, சமந்தா உள்ளிட்ட பிரபல நடிகைகள், லைக் போட்டுள்ளானர். 






மாளவிகா சாதாரண ஆள் இல்லை... புலியை பார்த்தே பயப்படாத ஆளு... அவங்களிடம் கொஞ்சம் கவனமா தான் இருக்கனும் என, அவரை பின் தொடரும் பலர், உஷார் ஆகியுள்ளனர்.