வாட்ஸ் அப் :


 குறுஞ்செய்திகள் அனுப்புவதில் முக்கிய தளமாக இருப்பது வாட்ஸ் அப் . உலகம் முழுவதும் இந்த செயலிக்கு  2 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் இருக்கின்றன.  பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம்  பயனாளர்கள் தவறுதலாக ஏதேனும் செய்தியை அனுப்பிவிட்டால் “delete for me” அல்லது “delete for everyone” என்னும் இரண்டு வசதிகளை பயன்படுத்தி அனுப்பிய செய்திகளை அழித்துவிடலாம்.







undo வசதி :


ஏற்கனவே அறிமுகமான மேற்க்கண்ட வசதிக்கு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சூழலில் அடுத்ததாக இது சார்ந்த மற்றொரு வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த வசதி மூலம்   “delete for everyone”  என்பதை கொடுப்பதற்கு பதிலாக “delete for me” என கொடுத்து மாற்றியிருந்தால் அதனை மீண்டும் எடிட் செய்துக்கொள்ள முடியும்.இதனை undo என்ற வசதியில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.



சோதனை முயற்சி :


வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து சமீபத்திய முன்னேற்றங்களையும் கண்காணிக்கும் Wabetanifo தகவலின் படி , விரைவில் இந்த undo வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது இது சோதனை முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை பகிர்ந்த டெக்கி ஒருவர் , டெலகிராமில் இருப்பது போன்ற பாப் அப் வசதியுடன் கூடிய   undo வசதி இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.







எடிட் வசதி:


இதே போல மற்றொரு வசதிக்கான சோதனை முயற்சியிலும் வாட்ஸப் உள்ளது. அதாவது செய்தியை அனுப்பிய பிறகு அதில் ஏதேனும் தவறு இருந்தால் , அதனை திருத்திக்கொள்ளும் எடிட் பட்டனும் இடம்பெறும் என  தெரிகிறது. முன்னதாக ஃபேஸ்புக் கமெண்டுகளை பதிவிட்டதும் , அதனை எடிட் செய்வதற்கு இப்படியான வசதி  அனுப்பிய செய்திகளுக்கு அருகிலேயே வருவதை நாம் பார்த்திருப்போம். அதே போன்றதொரு வசதியை வாட்ஸ் அப்பிலும் எதிர்பார்க்கலாம்.  


மேற்ச்சொன்ன இந்த இரண்டு புதிய வசதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.