நாள்: 06.06.2022


நல்ல நேரம் :


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை





கௌரி நல்ல நேரம்





 

காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


சூலம் –  கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். நல்லவர்கள் நட்பு கிட்டும். நீண்டநாட்களாக எதிர்பார்த்து இருந்த கடன்தொகை வசூல் ஆகும். புதிய தொழில் வாய்ப்புக்கான அறிகுறிகள் கிட்டும். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் தேவையற்ற எதிர்ப்பு உங்களுக்கு ஏற்படலாம். பணிபுரியும் இடங்களில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. அடுத்தவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. கொடுக்கல் வாங்கலில் அடுத்தவருக்கு உத்திரவாதம் கூடாது. 


மிதுனம் : 


மிதுன ராசி நேயர்களே, வீண் கோபம் உண்டாகும். அமைதியாக இருப்பது பலனளிக்கும். சினம் குறைய சிவபெருமானை வணங்க வேண்டும். தொலைதூரப் பயணத்தை ஒத்திவைப்பது நல்லது. பெற்றோர் பிள்ளைகள் மனக்கசப்பு நீங்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். கேளிக்கைகள் நிறைந்த நாளாக அமையும். நண்பர்களுடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். திருமணத் தடைகள் நீங்கும். மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் பணவரவு உண்டாகும். வீடு மாற்றம் வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்களை உண்டாக்கும். புதிய தொடக்கம் வாழ்வில் அமையும். இந்த திங்கள் வாழ்வில் புதிய திங்களை உண்டாக்கும். கல்யாணப் பேச்சுக்கள் தொடங்கும். வேலை மாற்றம், பணியிட மாற்றம் ஏற்படும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள் இதுவாகும். மனதில் தேவையற்ற துன்பம் உண்டாகும். நண்பர்கள், அக்கம்பக்கத்தினரிடம் கவனமுடன் பழக வேண்டும். ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. முக்கிய விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் மன அமைதி கிட்டும். குடும்பத்தில் நீடித்து வந்த மனக்குழப்பம் தீரும். நிம்மதி அடைவீர்கள். பெற்றோர்கள் பேச்சை கேட்டு பிள்ளைகள் செயல்படுவார்கள். நல்லவர்கள் நட்பு தொடரும், தீயவர்கள் நட்பு தானே விலகும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாளாகும். தொழில் மற்றும் வியாபாராத்தில் அபார வளர்ச்சி கிட்டும். நண்பர்கள், சுற்றத்தார் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், பதவி உயர்வு கிடைக்கும். காதலில் நீடித்து வந்த சிக்கல் தீரும். 


மகரம் :


மகர ராசி நேயர்களே, தேவையில்லாத சிரமம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். தொழில் போட்டி அதிகரிக்கும். பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அம்மன் வழிபாடு மன அமைதி தரும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் மனதில் அமைதி குடிகொள்ளும். நீண்டநாள் நீடித்து வந்த பிரச்சினை சுமூகமாக நிறைவு பெறும். பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்வார்கள். நன்மைகள் நடைபெறும். பணவரவு உண்டாகும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அபாரமான நாளாகும். பெரிய சாதனைகளை படைப்பீர்கள். தொலைதூர தேசம் செல்லும் யோகம் உண்டாகும். சகோதர வழியில் அன்பு அதிகரிக்கும். விளையாட்டு மற்றும் படிப்பில் மிகப்பெரிய சாதனை படைப்பீர்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண